மேம்பட்ட அடையாளம் A Super Sign 59-12-27M ஜெபர்ஸன்வில், இண்டியானா, அமெரிக்கா 1. [சகோதரன் நெவில், சகோ.பிரன்ஹாமிடம் "உம்முடைய ஊழியத்தின் மூலமாகவும், அன்பின் மூலமாகவும், தேவன் எங்களுக்குப் பெலனைக் கொண்டு வந்தார். இந்த நேரத்தில் அதை நாங்கள் ஒரு எளிய வழியிலே உமக்கு ஒரு சிறிய பரிசை அளிப்பதன் மூலமாக வெளிக்காட்ட விரும்புகிறோம்” என்று கூறுகிறார்). நன்றி சகோதரன் நெவில். (சகோதரன் நெவில், "தேவனுடைய ஆசீர்வாதம் உம் மேல் தங்கியிருப்பதாக-! உம்மை வரவேற்கிறோம்" என்று கூறுகிறார்). மிகவும் நன்றி சகோதரன் நெவில் அவர்களே-! 2. சபையே, உங்களுக்கும் நன்றி. இதனுள்ளே என்ன இருக்கிறது என்பதை நான் அறியேன். நீங்கள் எல்லோரும் எனக்கு என்னவாய் இருக்கிறீர்கள் என்பதையும், நீங்கள் எனக்குச் செய்த எல்லாக் காரியங்களையும், நான் என் முழு இருதயத்தோடும் பாராட்டுகிறேன். இவை உங்களுக்கானதாக இல்லாமல் இருக்குமானால், நான் இங்கே இருந்திருக்கவே மாட்டேன். தேவன் பிரசிங்கிக்கும்படி எனக்கு அருளிய இந்த செய்தியை விசுவாசிக்க ஒருவர் இல்லையென்றால் நான் பிரசிங்கிப்பதில் எந்தப் பயனும் இல்லை. ஒன்று சேர்ந்து கிரியை செய்வதற்கு நம்மில் இருவரும் இருந்தாக வேண்டும். ஆகவே, நான் இதை மிகவும் பாராட்டுகிறேன். 3. நமது சபையானது, நமது மத்தியில் எப்பொழுதுமே ஒரு நகைச்சுவை உணர்வைப் பெற்றதாய்க் காணப்படுகிறது. இப்பொழுது, சற்று நேரத்துக்கு முன்னே பின்னால் உள்ள அந்த அறையில் நான் உள்ளே வந்த போது ஒருவர் என்னிடமாக ஒரு பொட்டலத்தைக் கொடுத்து, "நான் மேடை மட்டுமாகவந்து, இதை சகோ.நெவிலுக்கு பரிசளிக்க முடியுமா-?" என்று கேட்டார். அவர்பால் உள்ள என்னுடைய உணர்வுகள் மட்டுமின்றி, இந்த சபையின் ஐக்கியமும், இந்த வருடம் அவர் நமக்கு எவ்விதமாய் இருந்தார் என்பதற்கும், கடந்த ஆண்டுகளில் நமக்கு ஒரு போதகராக இருந்தார் என்பதற்கும், தொடர்ந்து வரக்கூடிய ஆண்டுகளில் அவர் நமக்குப் போதகராக தொடர்ந்து இருக்க வேண்டுமென்பதே நமது நம்பிக்கையும், ஜெபமுமாக இருக்கிறது என்பதற்கு, என்னிடம் இருந்தும், சபையார் இடமிருந்தும் உமக்கு ஒரு சிறு அடையாளம், சகோ.நெவில் அவர்களே-! 4. [சகோதரன் நெவில், "உங்கள் அனைவருக்கும் மிகவும் நன்றி-! தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அன்பான காரியங்களை நான் பாராட்டுகிறேன். எனக்கு உதவி செய்த சபையின் ஒவ்வொருவரையும் நான் பாராட்டுகிறேன். சகோ.பிரான்ஹாம் நமக்கு என்ன எல்லாம் செய்தார் என்பதையும், அவருடைய ஊழியத்துக்காகவும், நம்மில் கடைசி நபர் மட்டுமாக, மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்பதை, இந்தக் காலையில் உண்மையிலேயே நான் இருதயத்தின் ஆழத்தில் உணர்ந்தேன். கர்த்தருக்காக இந்த வருடம் அவர் செல்லும் இடங்களில் தேவன் அவரை ஆசீர்வதித்து, பிரசித்திப்படுத்து-வாராக என்பதே எனது ஜெபமாயிருக்கிறது. மிகவும் நன்றி-! உண்மையிலேயே நான் இதைப் பாராட்டுகிறேன். சரி" என்று கூறுகிறார்). 5. சிறு குழந்தைகள் அது சரி. சிறு குழந்தைகள் அவர்கள் அறைகளுக்குள்ளாக செல்ல வேண்டியவர்களாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். இக்காலையில், அந்த அறைக்கு உள்ளே நல்ல பிள்ளைகளாகவும், உத்தமமான சிறு பெண்களாகவும் பையன்க ளாகவும் இருக்கவேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கூட்டம் முடிந்த பின்பு, உங்களுக்கு ஏதோ ஒரு காரியம் வைக்கப்பட்டிருக்கிறது என்று நான் நினைக்கிறேன். 6. இப்பொழுது பெரியவர்களுக்கு, இளவயதுள்ளவர்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளதை நாம் காண்கையில், அவர்களது வகுப்புகளை, தனித்து நடத்துவதற்கு ஏற்ற வகையில் ஒரு புதிய சபையை நாம் பெறும் வரைக்குமாக ஆவலோடே காத்திருப்போம். 7. நம்முடைய சகோதரி ஆர்னால்டு நிச்சயமாக புயமளவு, கையளவு அல்ல, புயமளவு என்று எனது சிறிய மகள், சகோதரி ஆர்னால்ட்-ஐக் குறித்துச் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் என்னிடம், "அப்பா-! சகோதரி ஆர்னால்டுக்கு இது மிகவும் கடினமானது' என்றாள். மேலும் அவள், "ஏனென்றால், நாங்கள் புரிந்து கொள்ளத்தக்க பாஷையில் அவள் எங்களுடனே பேசிக் கொண்டிருப்பாள். அப்பொழுது ஒரு சிறு குழந்தை ஏதாவது ஒன்றைச் செய்து விடும். பாருங்கள்-! பின்னர் அவள் பேசுவதை நிறுத்தி விட்டு, போய் அந்தக் குழந்தையை திருத்துவாள்” என்று கூறினாள். எனவே, இந்த வகுப்புகள் அனைத்தையும், இந்த ஒரு ஸ்திரீ பார்த்துக் கொள்வது மிகவும் கடினமான ஒன்று. தேவையுள்ள இந்த நேரத்தில் அவளது ஒத்துழைப்புக்காக நாங்கள் அவளை மிகவும் பாராட்டுகிறோம். கர்த்தர் அவளை ஆசீர்வதிப்பாராக-! 8. இப்பொழுது நாம் கர்த்தருக்குச் சித்தமானால் சீக்கிரமாக, ஒரு நாளிலே, ஒரு நல்ல பெரிய ஜெபக்கூடாரம் நமக்கு உண்டாயிருக்குமென நம்பிக்கை கொண்டிருக்கிறோம். அதிலே ஞாயிறு பள்ளிக்கான அனைத்து அறைகளும் இருக்கும். சிறிய குழந்தைகளுக்கு மறைவான இடமும், பீடத்துக்கு மேலே இங்கே இவ்விடத்தில் கண்ணாடி முகப்பு கொண்ட ஒரு குழந்தைகளுக்கான பள்ளியும், அந்தக் குழந்தைகளை கவனித்துக் கொள்ளுவதற்கென்று, பயிற்சி பெற்ற ஒரு கண்காணிப்பாளரும் இருப்பார்கள். இங்கே கூட்டத்தில், எந்த ஒரு இடையூறுகளும், குறுக்கே நடந்து போவதும், வருவதும் ஆகியவை இருக்காது. இந்த சிறு பிள்ளைகள் அமைதியாகவே இருக்க மாட்டார்கள். அவர்கள் புரிந்து கொள்ளமாட்டார்கள், நாம் தான் அவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும். நம்மை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. அப்படியாக, கர்த்தர் எவ்விதமாக செய்ய வேண்டுமென்று வழி வைத்திருக்கிறாரோ, அவ்விதமான ஒரு இடத்தை நாம் பெறுவோம் என்று விசுவாசிக்கிறேன். செருக்காக அல்ல, ஆனால் ஒரு நல்ல சபையாக நாம் இருப்போம். நாம் அதை எதிர்நோக்கினவர்களாக இருக்கிறோம். 9. இவைகள் ஒரு சூட் தைக்கப்பயன்படும் துணிகளாக எனக்கும், சகோதரர் நெவிலுக்கும் கொடுக்கப்பட்டது என்ற ஒரு சிந்தனை எனக்கு வந்தது. (சகோதரர் நெவில், "இது எனக்குக் தெரியவில்லை" என்று கேட்கிறார்). இதுதான் என்று நினைக்கிறேன். எனக்கு சரியாகத் தெரியவில்லை . காரணம், இது எனக்காகக் கிடைக்கப் பெற்ற ஒரு சூட் அடங்கிய பெட்டியைப் போன்று உள்ளது. நீங்களும் அந்த விதமே உணரவில்லையா-? ஆம் இது ஒரு வேளை சூட்டாகவோ அல்லது மேலங்கியாகவோ இருக்கலாம். மேலும் நான் இரண்டுமே பார்ப்பதற்கு ஒன்று போல் தோற்றமளிக்கிறது. அது இங்கே மனுஷரைப் பொறுத்த ஒன்றில்லை என்பதைக் கட்டுகிறது. ஓ-! அப்படியானால், எனக்கு ஒரு மேலங்கி கிடைக்கப்பெற்றேன். எனக்குத் தெரியும். அவைகள், இல்லை, இல்லை அது மேலங்கி அல்ல. எனவே, நீங்களும் ஒன்றை வைத்திருக்கிறீர்கள் அது வெறும் கண்டிப்பாக இது ஒரு சூட்டாகத்தான் இருக்க வேண்டும். எப்படியாயினும், நாம் அதைப் பாராட்டுவோம். சகோதரர் நெவில், "ஆமென்" என்கிறார் 10. நிச்சயமாக போதகர்களும், மேய்ப்பர்களும். போதகர்' என்பதற்கு “மேய்ப்பர்”, "ஆடுகளை மேய்க்கின்ற ஒருவர்”, என்று அர்த்தம். உங்கள் ஒவ்வொருவருக்காகவும் நன்றி உள்ளவர்களாயிருக்கிறோம். ஏனெனில் உங்களது கருணையும், நினைவுகளும், பணமும் இந்தக் காலை வேளையில் இந்த அன்பளிப்பை உண்டாக்கினது. மேலும், தேவனுடைய கிருபையின் மூலமாக உங்களை சரியான வழியில் நடத்துவதற்குத் தேவையான அனைத்தையும் செய்வதற்கு, போதகர் என்ற முறையில் நாங்கள் எங்களை அர்ப்பணிக்கிறோம். சில நேரங்களில் நாங்கள் பேசுகிற காரியங்கள், புரிந்து கொள்வதற்குக் கடினமானதாய்க் காணப்படும். ஆனால், வழிகாட்டுதல் என்ற முறையில் மாத்திரமே நாங்கள் அதைச் செய்கிறோம். அதாவது, உயிர்த்தெழுதலின் போது, நீங்கள் எங்களை வெகுவாகப் பாராட்டத்தக்கதான ஒரு ஸ்தானத்திற்கு உங்களைக் கொண்டு வர முயற்சிக்கிறோம். ஏனென்றால், உங்களுடனே பேசும் பொழுது, நாங்கள், எங்களைக் குறித்து கருத்தில் கொள்ளாமல், எங்களுடைய சொந்த நினைவுகளை அல்ல, ஆனால், பரிசுத்த ஆவியானவர் எங்களை எப்படி நடத்துகிறாரோ, அதன்படியே செய்ய முயற்சிக்கிறோம். அதுவே, எங்களுடைய முயற்சியாயும் இருக்கிறது. இன்னும் அதே காரியத்தைச் செய்ய நாங்கள் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். போதகருக்கும், எனக்கும் அதுவே சரியானதொன்றாய்க் காணப்படுகிறது. 11. சூரியன் பிரகாசிப்பதைக் காண்பதற்கு நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். எனது சகோதரன் டாக் என்னிடம், அவர் ஃப்ளோரிடாவிலுள்ள சகோதரர் ஃப்ராங்கி வெப்பர்-க்கு ஒரு தகவல் அனுப்பினதாகவும், அதில், கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியே வந்து, சட்டைகளை அணிந்து கொண்டு, கார்க் கண்ணாடிகளை துடைத்துக் கொண்டிருந்தது நீர் மாத்திரமல்ல என்று குறிப்பிட்டிருந்ததாகவும் கூறிக் கொண்டிருந்தார். ஏனென்றால், அவரும் அதையே செய்து கொண்டிருந்தார். அவ்வளவு உஷ்ணம். நல்லது, ஃப்ளோரிடா, வெயிலினால் அலுத்துப் போய் விட்டது என்பது உங்களுக்குத் தெரியும். அது எப்பொழுதும் ஃப்ளோரிடாவையே நோக்கிக் கொண்டிருக்கிறது அது சற்று இந்தியானா பக்கம் வந்து அங்கு என்ன நடக்கிறது என்பதைப் பார்க்குமானால் நல்லதாக இருக்கும். நீங்கள் அவ்விதம் நினைக்கவில்லையா-? [சபையார், "ஆமென்" என்கின்றனர்) நமக்கு இந்தக் காலை வேளையில், ஒரு சந்திப்பை ஏற்படுத்தினதற்காக நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். 12. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, நித்தியமான பரலோக சந்தோஷத்தின் பிரகாசத்தை நமக்குக் கொடுக்கின்ற தேவனுடைய குமாரனுடைய வெளிச்சத்திற்காக, நாம் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். 13. இப்பொழுது உள்ளே நுழைந்த இந்தச் சிறுவன், தனது பெற்றோருடன் உட்கார விரும்புகிறான் என நினைக்கிறேன். "சிறுவனே, உனக்கு வேண்டுமானால் பின்னால் நடக்கிற ஞாயிறு பள்ளி வகுப்பிற்கு நீ செல்லலாம்" சகோதரர் டைலர், "நீங்கள் அந்த சிறுவனை வகுப்பிற்கு வழி நடத்துவீரா-?” ஓ-! அது நல்லது. சில நேரங்களில் அவர்கள் தங்கள் சொந்தங்களுடன் உட்கார விரும்புவார்கள். அவர்களுக்கென்று பேசுகின்ற பொதுவான காரியங்கள் அங்கே இருக்கும். அது அவ்விதமே உள்ளது. 14. நான் அடிக்கடி கூறுவது போல, எட்டு, ஒன்பது, பத்து வயது நிரம்பிய, அல்லது பன்னிரண்டு வயது நிரம்பிய ஒரு பெண் தனது பாட்டியையே சுற்றிச் சுற்றி வருவாளானால், அங்கே ஏதோ ஒரு காரியம் தவறாக உள்ளது. பாருங்கள், அங்கு ஏதோ ஒரு காரியம் தவறாக உள்ளது. ஏனென்றால், அவர்களுக்கிடையே அதிக வயது வித்தியாசம் இருக்கும். நீங்கள், "ஒரு வேளை அந்தப் பாட்டியிடம் அவளுக்கு எங்கேயோ ஒரு இடத்தில் பை நிறைய மிட்டாய் அவள் கை நீட்டி எடுக்குமாறு இருக்கிறது. எனவே, அந்த சிறுமியின் கண்கள் பிரகாசமடைந்து, அதையே நோக்கிக் கொண்டிருக்கிறது" என்று யூகிக்கலாம். ஏனென்றால், அவர்களுக்கிடையே கொஞ்சுவதும், செல்லமாய் தட்டிக் கொடுப்பதும் தவிர, பொதுவான காரியம் வேறெதுவும் கிடையாது. அது அவ்விதமே இருக்கிறது. அது அவ்விதமே இருக்கிறது என்பதற்காக நாமும் சந்தோஷப்படுகிறோம். 15. அப்படியானால், ஏற்கெனவே ஆட்டுக்குட்டியும், புறாவும் என்பதைக் குறித்து நான் பிரசங்கிக்கையில் சொன்ன கூற்றை மீண்டும் வலியுறுத்துகிறேன். இதை நான் கூறி இருக்கிறேன். அதாவது அவர்களுக்கென்று பொதுவான காரியங்கள் இருக்கின்றன. எனவே, அந்த காரியங்களைக் குறித்து அவர்கள் பேசக் கூடும். 16. மேசன் விடுதியில், மேசன் சகோதரர்கள் தாங்கள் பேசுவதற்கென்று ஒரு பொதுவான காரியத்தைப் பெற்றிருக்கிறார்கள். அது விநோதமான சகோதர நபர்களின் விடுதி அது போல நாட்டை விட்டு வெளியே இருக்கும் ஜெர்மானியர்கள் மற்றொரு ஜெர்மானியரை சந்திக்க நேர்ந்தால் அவர்கள் தங்கள் நாட்டைப்பற்றி அல்லது சொந்த ஊரைப் பற்றிப் பேசிக் கொள்வார்கள். அது போல, இத்தாலியர்களுக்கென்றும் பேசுவதற்கு காரியங்கள் உண்டு. 17. மேலும், கிறிஸ்தவர்களுக்கென்றும் பேசுவதற்கென பொதுவான காரியங்கள் உண்டு. ஆகவே தான், நாம் இப்படிப்பட்ட இடங்களில், கிறிஸ்து இயேசுவிற்குள் உன்னதங்களில் கூடி வருகிறோம். ஏனென்றால், நாம் ஒரே தேசத்தின் குடிமக்களாக இருக்கிறோம். நாம் இந்த உலகத்திற்கு அந்நியர்களும், பரதேசிகளுமாய் இருக்கிறோம். எனவே தான், நாம் இப்படிப்பட்ட ஓய்வு நாள் காலை வேளைகளிலும், ஜெபக்கூட்டங்களிலும், ஒன்று கூடுவதை நேசிக்கிறோம். ஏனென்றால், நமக்கென்று பொதுவான காரியங்கள் உண்டு. நமக்கென்று உள்ள பொதுவான காரியங்களைக் குறித்து, அதாவது, கர்த்தரையும், அவருடைய கிரியைகளையும் குறித்துப் பேசுவதையே நாம் விரும்புகிறோம். அதாவது, யாரோ ஒருவர் அவருடைய இருதயத்தில், ஏதோ ஒன்றினால் பற்றி எரிபவராக, கர்த்தர் அவர்களை சுகமாக்கி, தங்களை அர்ப்பணித்து "கர்த்தர் எனக்கு செய்ததைப்பார்த்தீர்களா-?" என்று சொல்வதற்காகவே அவ்வாறு செய்கிறார்கள். யாரோ ஒருவர் மகத்தான ஆசீர்வாதங்களை பெற்றுக் கொண்டதனிமித்தம் சபைக்குச் செல்ல வேண்டுமென்றும், அந்த ஆசீர்வாதங்களைக்குறித்து மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது போன்ற காரியங்களை நாம் பெற்றிருக்கிறோம். ஆகவே தான் நமக்கு பொதுவான காரியங்களைப் பெற்றுள்ளோம். 18. இக்காலையில், சபையில் ஒலி அமைப்பு சிறப்பாக இருப்பதைப் போன்று காணப் படுகிறது. அவ்விதமே எனக்குத்தோன்றுகிறது. உறுதியாகத்தெரியவில்லை. அவ்வளவான எதிரொலி இங்கே உள்ளது. 19. கடந்தவாரம் நடந்த எழுப்புதலின் பலன்களைக் குறித்து, நான் மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறேன். பாருங்கள், அது உள்ளூரில் மாத்திரம் அல்ல, அதைச் சுற்றிலும் வித்தியாசப்பட்ட தேசங்களில் ஒரு அசைவைக் கொண்டு வந்ததோடல்லாமல், "கர்த்தர் நல்லவராய் இருந்தார்" என்று கேட்கும்படியாகவும் செய்தது. இப்பொழுது நம்முடைய பழைய இணைப்புகளை எரித்து காரியங்களை ஆயத்தம் செய்து, கர்த்தருக்குள்ளாக பிரவேசித்து, ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளும்படி ஆயத்தமாயிருக்கிறோம். அந்த சிறிய நேரமே அதைச் செய்திருக்குமென்றால், நாம் அதைத் தொடர்ந்து செய்வோமாகில், அது எவ்விதமாயிருக்கும்-? பாருங்கள். எனவே, அதை அணைந்து போக விடவேண்டாம். நம் இருதயங்களில் அக்கினி எரிந்து கொண்டிருக்கிறது. அதன் புகையின் சமிக்ஞைகள் அதாவது, இயேசு கிறிஸ்து ஜீவிக்கிறார் என்பதை உலகம் முழுவதிலுமிருந்து பார்க்கும் வரைக்குமாக நாம் எல்லா நேரமும், அநேக காரியங்களை ஊற்றிக் கொண்டே இருப்போம். 20. நானும், என் மனைவியும், ஏனையோரும் ஒரு புதிய பிரதிஷ்டையை செய்து கொண்ட பிறகு, வீட்டைச் சுற்றிலும், வித்தியாசமான காரியங்கள் நடைபெறுவதைக் கண்டோம். அதாவது, முன்பு போல, 'நமக்கு அது கிடைக்காது, நாம் இதைப் பெற்றுக் கொள்ள மாட்டோம்' என்று நடுக்கத்துடனும், உதறலோடும் காணப்படாமல், அதனோடு அமைதியான முறையிலிருந்து, அநேக காரியங்களைப் பெற்றுக் கொண்டோம். 21. இப்பொழுது, ஒரு புதிய வருடம் வர இருக்கிறது. நாம் புதிய பக்கங்களைத் திருப்புவதில் நம்பிக்கை கொள்ளாமல், பழைய பக்கங்களை எரித்துப் போடுவதில் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். எனவே, வருகிற ஆண்டில், கர்த்தர் நமக்கு என்ன செய்வார் என்பதை நாம் அறியாததினால், வருகிற வருடம் முழுவதிலும் நீங்கள் உங்களைத் தேவனுக்கென்று ஒப்புக் கொடுத்தவர்களாக இருங்கள். 22. உங்கள் ஒவ்வொருவருக்காகவும் நாங்கள் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். எல்லா இடங்களிலுமுள்ள கிறிஸ்துவின் சரீரத்தின் ஒவ்வொரு அங்கத்தினருக்காகவும் நான் தேவனுக்கு மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். வேறுபட்ட விசுவாச கட்டங்களிலும், அவர்கள் எவ்வளவு தான் என்னோடு ஒத்துப் போகாதவர்களாக இருந்தாலும், நான் இன்னமும் அந்த ஒருவரோடு நன்றியுள்ளவனாயிருக்கிறேன். வேத வார்த்தைகளில் அவர்கள் சிறிது தவறாயிருக்கிறார்கள் என்று நான் கருதினாலுங்கூட, அவர்கள் எதை விசுவாசிக்கிறார்களோ, அதில் உத்தமமாய் இருக்க முயற்சிக்கிறார்கள். நிச்சயமாக, நான் அந்த சகோதரர்களோடு சகித்துப் போவேன். அவர்களும் என்னோடு, என் தவறுகளிலும் மற்ற காரியங்களிலும் சகித்துப் போகிறார்கள். ஏனென்றால், நம்மில் ஒருவரும் பரிபூரணமாய் இல்லை. 23. ஆனால், அன்றொரு நாள் மாலையில் காலங்களின் இணைப்பாகிய பெந்தெகோஸ்தேவில் அல்லது இந்தப் புதிய கிறிஸ்தவ சபையானது எப்படிப்பட்ட சபையாக இருக்கும்-? என்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட வேண்டிய ஆலோசனையில், தேவன் தம்மை வேறு பிரித்துக் கொள்கிறார்" என்பதைப் பற்றி நான் பேசினேன். ஆலோசனையே அதற்காகத்தான் வைக்கப்பட்டது. தீர்மானிக்கப்பட்ட அந்த சபையின் தன்மையை அப்-2-ல் காண்கிறோம். மேலும், அது எவ்வகையான சபை, எவ்விதம் இருக்கும் எனவும், சபையானது கிறிஸ்துவைப் பெற்றுக் கொண்ட போது, சபையின் எதிர்க்கிரியை எவ்விதமாய் இருந்தது என்பதையும் காண்கிறோம். நான் அதை நேசிக்கிறேன். பெந்தெகோஸ்தே நாளன்று ஏற்படுத்தப்பட்ட அந்த சபைக்காக நான் உண்மையான அக்கறையோடு போராடிக்கொண்டிருக்கிறேன். அப்போழுது அது விநோதமானதொன்றாக இருந்திருக்குமானால், இப்பொழுதும் அது விநோதமானதாகவே இருக்கும். அது இன்னுமாக, பாவம் பூமியில் இருக்கும் வரைக்குமாக, சண்டை இடுவதற்கு போர்க்களம் இருக்கும் வரைக்குமாக, நம் எதிரிகளுக்கு அது விநோதமாகவே இருக்கும். இருப்பினும், அது, தேவன் நமக்காக செய்வார் என்று அதற்காக உத்தமமாய்ப் போராடிக்கொண்டிருக்கிற தேவனுடைய விலையேறப்பெற்ற ஒரு காரியமாயிருக்கிறது.. 24. இப்பொழுது இங்கே சில அறிவிப்புகள் உள்ளது. சகோதரர் நெவில் ஏற்கெனவே இவைகளை அறிவித்திருப்பார் என யூகிக்கிறேன். 25. ஜெபிப்பதற்கும், கர்த்தருடைய முகத்தைத் தேடுவதற்கும், இந்த வாரம் நான் வீட்டிலேயே இருந்தேன். ஏனென்றால், வருகின்ற வருடத்தில், தேவனுடைய உதவியைக் கொண்டு, அவர் மாத்திரம் எனக்கு உதவி செய்வாரானால், என்னுடைய ஜீவியத்தில் இதுவரை செய்ததைக் காட்டிலும், கடினமான போராட்டத்தை தொடர இருக்கிறேன். அந்த வருடத்தின் பெரும்பாலான பகுதிகள், வெளிநாடுகளிலும், ஹய்டீஸ் மற்றும் அதன் தீவுகளிலும், தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் இந்தியா மற்றும் ஸ்கான்டிநேவியா போன்ற பகுதிகளிலும் இருக்கும். கர்த்தர் அனுமதிப்பாரானால், அந்த பிரயாணத்தைக் குறித்ததான காரியங்கள் இந்த வாரத்தில் முடிவெடுக்கப்படும். எனவே நான் ஏதாவது ஒரு காரியத்தைச் செய்ய வேண்டுமென்றோ அல்லது எங்காவது செல்ல வேண்டுமென்றோ உணர்த்தப்பட்டால், அவ்விதம் செய்யவே கர்த்தர் என்னை அனுப்பி இருக்கிறார். 26. அப்படி நான் செல்லும் போது, வானூர்தியை விட்டு, மண்ணிலே இறங்கினவுடனே, ஒருவேளை யாரோ ஒருவர் என்னிடமாய் வந்து, "ஓ குறிப்பிட்ட ஸ்தாபனம் இதை விட்டு விட்டது அல்லது வேறெதையோ செய்து விட்டது என்றோ அல்லது இது தவறாகப் போய் விட்டது அல்லது எங்களால் அதைச் செய்ய முடியாமல் போய் விட்டது என்றோ அல்லது கூட்டங்கள் நடத்துவதற்கு அதிகாரப்பூர்வமாக அனுமதி கிடைக்கவில்லை” என்றோ கூறுவதைப் போல காணப்படலாம். 27. அது பிசாசு என்பது எனக்குத் தெரியும். அப்பொழுது நான் கர்த்தருடைய நாமத்தினால் வருகிறேன்' என்பதன் பேரில் நிற்க விரும்புகிறேன். பாருங்கள்-! 'நான் தவறு செய்து விட்டேனா-? என்பதாக அது இல்லை. ஏனெனில் நான் வழி நடத்தப்பட்டுள்ளேன். அப்பொழுது நீங்கள் கடினமான முயற்சிகளை எடுத்தவர்களாக போர்க்களத்தைத் தொடர வேண்டும். 28. இப்பொழுது, நாம் புத்தகத்தைத் திறப்பதற்கு முன்பாக அல்லது நாம் அதை வாசிக்கையில் தேவன் நமக்கு அதைத் திறந்து கொடுக்கும்படி அவரைக் கேட்பதற்கு முன்பாக, இந்தக் காலையில், சபைக்கு இந்த செய்தியை நான் கொண்டு வருவதன் நோக்கத்தைச் சொல்ல விரும்புகிறேன். இது சபைக்கு என்னுடைய கிறிஸ்துமஸ் செய்தியாய் இருக்கிறது. இதைக் குறித்து நான் விசுவாசிப்பதை உங்களுக்கு அளிக்கும்படி பரிசுத்த ஆவியானவர் தாமே எனக்கு உதவி செய்வாராக-! இப்பொழுது, எவ்வளவுதான் வேதாகமத்தில் தெளிவாக எழுதப்பட்டிருந்தாலும் மற்றும் எவ்வளவு தான் ஒரு நபர் அதைத் தெளிவாக புரிந்து வைத்திருந்தாலும், மக்களுக்கு அதை அளிப்பதற்கு, அவர்கள் பரிசுத்தாவியையே சார்ந்திருக்க வேண்டியதாயிருக்கிறது. இப்பொழுது தான் கிறிஸ்மஸ் நிறைவடைந்திருக்கிறது. பல கிறிஸ்மஸ் கதைகளையும், அதைக் குறித்ததான ஒலிபரப்பு களையும் மற்ற கிறிஸ்துமஸ் செய்திகளெல்லாவற்றையும் கேட்டிருப்பீர்கள். இந்தச் செய்தியானது கிறிஸ்மஸ் கதைக்கு அப்பாற்பட்டதாய் இருக்கும். இருப்பினும் தேவன் அதை என்னுடைய இருதயத்திலே வைத்தார். 29. இப்பொழுது நாம் அவருடைய சமுகத்திலும், அவருடைய நீதியின் நிழலிலும், அவருடைய இரக்கத்தைக் கேட்கும் படியாக நம்முடைய தலைகளை வணங்குவோம்... 30. ஓ, தேவனே-! ஆசீர்வதிக்கப்பட்ட எங்கள் இரட்சகரே-! பிதாவே-! நாங்கள் உம்முடைய இரக்கத்தின் சிங்காசனத்தை அணுகுகிறோம். நீர் எங்களுக்குச் செய்த எல்லாவற்றிற் காகவும், உமக்கு எங்கள் ஜெபங்களையும், எங்கள் நன்றிகளையும் செலுத்தும் வண்ணமாக, இந்தக் காலை வேளையில் உம்முடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் தாழ்மையுடன் எங்களை அர்ப்பணிக்கிறோம். விசேஷமாக இந்தக் கடைசி வாரத்தில், இப்படியாக இருதயங்களில் பசியுண்டானவர்களாக ஜனங்கள் உபவாசித்த போது பரிசுத்த ஆவியானவர் அவர்களை ஆசீர்வதித்து மகத்தான காரியங்களை எங்கள் மத்தியில் செய்தார். வியாதியஸ்தர்கள் சுகமாக்கப்பட்டார்கள். தேவன் ஜீவிக்கிறார். அவர் தம்முடைய பிள்ளைகளை நேசிக்கிறார் என்று தேவன் அறியப்பட்டார். 31 “என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள்.... ஒன்று கூடி ஜெபிக்கும் போது, பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, என்ற தேவனாகிய கர்த்தரின் வார்த்தையைக் கூறின தீர்க்கதரிசியின் வார்த்தைகள் இன்னமும் மிகவும் உண்மையானதாயிருக்கிறது. அந்த வார்த்தைகள், முதன் முதலில் கூறப்பட்ட போது, இருந்தது போலவே இப்பொழுதும் அவ்வளவு உண்மையாக இருக்கிறது. கர்த்தாவே நாங்கள் அதை அவ்விதமே கண்டோம். இப்பொழுது எங்கள் எல்லா பாவங்களையும், பாவம் என்னும் எல்லா அவிசுவாசங் களையும் மன்னிக்கும்படியாய் நாங்கள் ஜெபிக்கிறோம். 32. ஒரு சமயத்திலே அந்த முதல் சபையை அசைத்த, அந்த விசுவாசத்தை நீர் எங்களுக்குத் திரும்ப அளிக்கும்படியாக, நாங்கள் ஜெபிக்கிறோம் கர்த்தாவே-!. சுலபமான மலர்ப் படுக்கைகளை அல்ல, ஆனால் தேவனுடைய இரக்கத்துக்காகவும், அவருடைய பிரசன்னத்துக்காகவும், எங்களோடுகூட போகும்படியான, அவருடைய ஆசீர்வாதங்களுக் காகவும், நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். இந்தக் களத்தில் இருந்தாலும், அல்லது கடல் கடந்த களத்தில் இருந்தாலும், அல்லது, சொகுசாக ஒன்று இருந்தாலும், அல்லது சுலபமான படுக்கைகளாக இருந்தாலும், அல்லது போர் முனையாக அது இருந்தாலும், அது எங்கே இருந்தாலும், ஓ, கர்த்தாவே-! உம்முடைய மிகச் சிறிய சித்தமானது உம்மைச் சேவிக்கும்படியான எங்களுடைய, மிகப் பெரிய வாஞ்சையாயிருக்கிறது. நாங்கள் இருளான குருட்டாட்டமான உலகத்திலே, பாவம் நிறைந்த, குருடான ஜனங்கள் மத்தியிலே, நடக்கிறபடியால், நாங்கள் வழிதவறிப் போகாதபடி, ஓ கர்த்தாவே எங்கள் பாதைகளைச் செவ்வைப்படுத்தும். நீர் உம்முடைய மேய்ச்சலின் ஆடுகளை, வழி நடத்துவது போல, பிதாவே-! எங்கள் பாதைகளைத் தெளிவாக்கும். 33. இந்தக் காலை வேளையில், காலை செய்திக்காக, உம்மிடத்தில் காத்திருக்கையில், மந்தையின் மேய்ப்பனானவர், அவருடைய ஜனங்களை, இனிமையோடும், தாழ்மையோடும், வழி நடத்துவாராக-!. பரிசுத்த ஆவியானவர் தாமே ஒவ்வொரு இருதயத்தோடும், தெளிவுபடப் பேசுவாராக, நாங்கள் தீர்க்கதரிசி பேசிக் கொண்டிருந்த, காரியத்தின் சாராம்சத்தைப் பிடித்துக் கொண்டு, பின்னர், ஒவ்வொரு வார்த்தையையும், உறுதிப்படுத்தும்படிக்கு, தேவனுடைய பிரசன்னத்தின் மகிமையான ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்வோமாக-! நாங்கள் இதை எங்கள் இரட்சகரும், உமது குமாரனுமாகிய இயேசுவின் நாமத்தில் கேட்டுக் கொள்கிறோம். ஆமென். 34. இக்காலை வேளையில், இங்குள்ளவர்களை நான் கேட்டுக் கொள்வது, வேதாகமத்தை உடையவர்கள், நீங்கள் என்னோடு கூட வசனத்தை வாசிக்க விரும்பினால், அல்லது நான் வாசிப்பதை நீங்கள் தொடர விரும்பினால் ஏசாயா புஸ்தகத்திற்கு வேதாகமத்தைத் திருப்புங்கள். தீர்க்கதரிசி ஏசாயா 7-வது அதிகாரம் அதிலிருந்து நான் ஒரு பகுதியை வாசிக்க விரும்புகிறேன். ஏசாயாவில் 7-வது அதிகாரம். நாம் தேவனுக்கும் ஆகாசுக்கும் நடந்த உரையாடலிலிருந்து ஆரம்பிக்கும் 10-வது வசனம்; "பின்னும் கர்த்தர் ஆகாசை நோக்கி; நீ உன் தேவனாகிய கரத்தரிடத்தில் ஒரு அடையாளத்தை வேண்டிக்கொள்; அதை ஆழத்திலிருந்தாகிலும், உன்னதத்திலிருந்தாகிலும் உண்டாகக் கேட்டுக் கொள் என்று சொன்னார். ஆகாசோ: நான் கேட்கமாட்டேன், நான் கர்த்தரைப் பரீட்சை செய்ய மாட்டேன் என்றான். அப்பொழுது ஏசாயா: தாவீதின் வம்சத்தாரே, கேளுங்கள்; நீங்கள் மனுஷரை விசனப்படுத்துகிறது போதாதென்று என் தேவனையும் விசனப்படுத்தப் பார்க்கிறீர்களோ-? ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள். தீமையை வெறுத்து நன்மையைத் தெரிந்து கொள்ள அறியும் வயது மட்டும் அவர் வெண்ணையையும் தேனையும் சாப்பிடுவார். அந்தப் பிள்ளை தீமையை வெறிக்கவும், நன்மையைத் தெரிந்துகொள்ளவும், அறிகிறதற்கு முன்னே, நீ அருவருக்கிற தேசம் இரண்டு ராஜாக்களால் விட்டு விடப்படும்.'' 35. இந்தப் பகுதியிலிருந்து, ஒரு தலைப்பை நான் எடுக்க விரும்பினால், "ஒரு மேம்பட்ட அடையாளம்" என்னும் வார்த்தையை உபயோகப்படுத்த விரும்புகிறேன். 36. மிகவும் காரிருளான இரவு, நமக்கு இருக்கும் பொழுது சில சமயங்களில், நமது கைகளைக்கூடப் பார்க்கமுடியாத அளவிற்கு காரிருளான நேரங்களில் கிளைகளாகப் பிரிந்து செல்லும் மின்னல்கள், அதிக வெளிச்சத்தையும், பிரகாசத்தையும் உண்டாக்கு-கின்றன. இருளிலே வெளிச்சம் இருக்கும் என்பதை நமக்கு காண்பிப்பதற்காகவே, அவைகள் அனுப்பப்பட்டுள்ளன. 37. இது ஆகாஸ் என்னும் துன்மார்க்கமான ராஜா அரசாட்சி செய்து கொண்டிருந்த காலமாயிருந்தது. நீங்கள் கவனிப்பீர்களென்றால், ஓ-! தாவீதின் வம்சத்தாரே-! கேளுங்கள்-! இது உங்களுக்கு அடையாளமாயிருக்கும் என்ற வார்த்தையை வைத்துப் பார்க்கும் பொழுது, கர்த்தர் ஒருபோதும் ஆகாசுக்கு ஒரு செய்தியை அளிக்கவில்லை. ஆனால், தாவீதின் வம்சத்தாருக்கே அதை அளித்தார். ஏனென்றால் அவர்கள் யுத்தம் பண்ணிக் கொண்டும், சகோதரர்களுக்கு விரோதமாக சகோதரர் எழும்பிக் கொண்டும் இருந்தார்கள். இஸ்ரவேலின் வரலாற்றின் அல்லது யாத்திரையில், அது மிகவும் இருளான நேரமாய் இருந்தது. ஆனால், தேவனோ, ஒரு தீர்க்கதரிசி மூலம் ஒரு நித்திய அடையாளத்தை முழங்கினார். 38. ஜனங்களுக்கு அடையாளங்கள் உள்ளன. நாம் அடையாளங்கள் நிறைந்த உலகத்தில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். மனிதன் சில குறிப்பிட்ட அடையாளங்களை அடையும்படி அவன் முயற்சித்துக் கொண்டிருக்கிறான். மனிதன் தன்னுடைய விஞ்ஞான ஆராய்ச்சி மூலமாகவும், அவனுடைய சொந்த சாதனைகள் எவ்வளவு தனிச் சிறப்புமிக்கது என்பதை உணர்த்தும் வகையில் ஒரு அடையாளத்தை, அவன் பெற முயற்சித்துக் கொண்டு இருக்கிறான். அல்லது தான் எவ்வளவு பெரியவன் என்பதைக் காண்பிக்கும், ஒரு அவனுடைய அறிவாற்றலின் நினைவுச் சின்னத்தை அல்லது அவன் எவ்வளவு ஒரு சூத்திரதாரி என்பதைக் காண்பிக்கக் கூடிய, ஒரு அடையாளத்தைப் பெறும்படி முயற்சித்துக் கொண்டிருக்கிறான். அவன் காலங்கள் தோறும் அதைச் செய்து கொண்டு இருக்கிறான். 39. உதாரணத்திற்கு, ஒரு நூற்றாண்டுக்கும் குறைவாக உள்ள ஒரு காலத்தில், உலக கப்பல் துறை வல்லுநர்கள், தாங்கள் கட்டும் கப்பலை, மூழ்கடிக்கத்தக்க, போதுமான அளவிற்கு, பெரிய அலை என்பதே இல்லை என்று தங்கள் தொழில் நுட்பத்தின் திறமையைக் காட்டக்கூடிய ஒரு அடையாளத்தை இந்த உலகத்திற்குக் கொடுக்க, அவர்கள் நினைத்தனர். அந்த குறிப்பிட்ட கப்பலுக்கு, அவர்கள் "டைட்டானிக்" என்று பெயர் சூட்டினர். மூழ்கடிக்கப்பட முடியாத அந்தக் கப்பலை உலகத்திற்குக் காண்பிக்க முடியும் என்று அவர்கள் சொல்லத்தக்க, அந்த சிறந்த கப்பல் கட்டும் கலையானது, ஒரு நிறைவுக்கு வந்தது. அது உலகத்திற்கு நீடித்திருந்த நினைவுச் சின்னமாகவும் இருந்தது. 40. எனவே அதைக் கட்டினவர்களின் அறிவாற்றல், அவர்களின் சொற்பொழிவு, மற்றும் உரையாடல்கள், மற்றும் இந்தக் கப்பலை மூழ்கடிக்கவே முடியாது என்ற விஞ்ஞானத்தின் நிரூபணம் ஆகியவைகள், அதன் பாதுகாப்பை மேலும் சுட்டிக் காட்டின. இந்தக் காரியங்களெல்லாம் அந்த விதமாக ஜனங்களிடத்தில் சொல்லப்பட்ட போது விஞ்ஞான ஆராய்ச்சி சரி என்று சொல்லுகிற வரைக்கும், அது எல்லாம் சரியாகத் தான் உள்ளது என்ற நிச்சயத்தைக் கொண்டவர்களாக, ஜனங்கள் காணப்பட்டார்கள். 41. ஆக, அவர்கள் அந்த கப்பல் பிரயாணத்தைத் துவக்கி சமுத்திரத்தைக் கடந்து கொண்டிருந்தார்கள். எந்தக் காரியமும் தங்களுக்குப் பாதிப்பை உண்டாக்காது என்ற அவ்வளவு பாதுகாப்பான உணர்வோடு, அவர்கள் பிரயாணிக்கையில், ஒரு பெரிய மதுபான விருந்தை அவர்கள் ஆயத்தம் செய்து கொண்டிருந்தனர். அதிலிருந்த எல்லா ஆண்களும், பெண்களும், கிட்டத்தட்ட அனைவரும் என்று நான் சொல்லுவேன். அவர்கள் குடித்து வெறித்திருந்தார்கள். கப்பலோட்டியும், கப்பல் தலைவனும் கூட, மற்ற எல்லோருமே குடித்து வெறித்திருந்தார்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள். எல்லா வாத்தியங்களும் முழங்க ஆரம்பித்தன. இன்றைக்கு நமக்கு இருக்கின்ற "ராக் அண்ட் ரோல்" போன்று அன்றைக்கு விசேஷமாய் காணப்பட்ட "ஜாஸ் மியூசிக்" இசைத்துக் கொண்டிருந்தது. இந்தக் கப்பல் எப்பேர்ப்பட்ட அலைகளையும், அல்லது எந்தக் கடலையும், தாங்கக் கூடியது என்று உலகத்திற்கு தங்களது அறிவின் திறமையின் அடையாளமாக கொடுத்த கப்பலில் மிகவும் பாதுகாப்போடு இருக்கிறோம் என்ற காரணத்தினால் அவர்கள் அப்படி இருந்தார்கள். 42. அவர்கள் அந்த வெறித்த நிலைக்குள்ளாக இருக்கையில், கப்பலானது மூடு பனிக்கு நேராகச் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது கப்பலின் தலைவர்களில் ஒருவன் “நாம் கப்பலின் இயந்திரங்களைக் கண்டிப்பாக சோதிக்க வேண்டும்", என்று கூறினான். ஆனால் பிரதான அதிகாரியோ, "கப்பலை நேராக முன்னுக்குச் செலுத்து-! நாம் துறைமுகத்திற்கு ஒரு குறிப்பிட்ட அழைப்பிற்கு நாம் போக வேண்டும்" என்று கூறினான். கப்பலும், அந்த சூழ்நிலையின் வல்லவன் என்பது போல, மூடுபனிக்குள்ளாக சென்றது. ஆனால், திடீரென்று, ஒரு மிதக்கும் பெரிய பனிக்கட்டியில் கப்பல் மோதி, அப்படியே தண்ணீருக்கு அடியில் சென்று விட்டது. 43. ஒரு புலவர் தமது பாடலில், தேவன் அவருடைய வல்லமையுள்ள புயத்தினால், இந்த உலகத்திற்கு அதை நிற்காது என்பதைக் காண்பிக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளதாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. 44. அவர்களுடைய மிகச் சிறந்த சாதனையானது, ஆயிரக்கணக்கான மக்களோடு, குடித்து வெறித்த மக்களோடு, கடலுக்கடியில் சென்று விட்டது. அது கிரியை செய்யவில்லை. 45. மறைந்த அடால்ஃப் ஹிட்லர் ஜெர்மானிய மக்களுக்கு, தான் ஒரு அதி புத்திசாலி என்றும் பிராணவ வாழ்க்கையின் அனைத்தையும் குறித்து அறிந்தவன் என்னும் அடையாளத்தைக்கொடுத்த ஒருவன். அவனைக் குறைத்து மதிப்பிடவில்லை. அதைக் குறித்து அவன் நன்கு அறிந்திருந்தான். அவன் மாகினோம் லைன் அல்லது செஃப்ரைட் லைன் ஆகிய கட்டிடங்களை அவன் கட்டி, அதில் இலட்சக்கணக்கான கான்கிரீட் மற்றும், எஃகுகளை ஊற்றி, ஜெர்மானிய மக்களுக்கு ஒரு நிச்சயத்தைக் கொடுத்தான். அவன் அதன் மீது நம்பிக்கை கொண்டவனாக அவனது தலைமை அலுவலகத்தை முன் வரிசையிலும், பின்னர் உணவு விடுதிகள், மற்ற வியாபார ஸ்தலங்களை பூமிக்கடியிலும் இருக்கும்படியாகவும் வைத்துக் கொண்டான். அதை இலட்சக் கணக்கான டன்கள் எஃகு மற்றும் சிமென்ட் கொண்டு கட்டினார்கள். அது எப்படியாகச் சென்றாலும், ஜெர்மன் பாதுகாக்கப்பட்டது. அது ஒரு பாதுகாப்பின் சின்னமாய் இருந்தது. ஆனால் அவைகள் நிரந்தரமாக சிதைக்கப்பட்டு, வெற்றி காணப்பட்டது. எச்சரோடு கூட சேர்த்து.... 46. ஒரு நாள் நிம்ரோத் என்பவன், தன்னுடைய அறிவாற்றலின் சாதனையைக் காண்பிக்கத்தக்கதாக ஜனங்களிடம் ஒரு கோபுரத்தைக் கட்டி அதைச் செய்ய முயன்றான். அவன் மேகங்களுக்கு மேலாக ஒரு கோபுரத்தைக் கட்ட இருந்தான்.ஒருவேளை தேவனுடைய கோபாக்கினை வருமென்றால் அதை வைத்து அவரையே மிஞ்சிவிடலாம்-!, என நினைத்தான். தன்னுடைய அறிவியல் ஆராய்ச்சியின் மூலமாக அவன் பாறைகளை மேலடுக்கி, கற்களை அடுக்கி, இவ்விதமாக தன்னுடைய அறிவாற்றல் மூலமாக ஜனங்களை ஒரு பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்ல முயற்சித்தான். ஆனால் பாஷைகள் தாறுமாறாக்கப்பட்டபடியினால், அவைகள் ஒன்றுமில்லாத நிலைமைக்கு வந்து விட்டது. அவர்களால் கோபுரத்தைக்கட்டி முடிக்கக்கூட முடியவில்லை. 47. பாபிலோனின் சுவர்களைக் கட்டின நேபுகாத்நேச்சார், அதைக் குறித்து மிகவும் பெருமை கொண்டவனாயிருந்தான். ஆறு குதிரைகள் பூட்டிய இரதங்களின் பந்தயம் வைக்கத்தக்க அளவுக்கு, அந்த சுவர்கள் மகா பெரியதாய் இருந்தன. அதன் கதவுகள் மிகவும் பெரிதாய் நூற்றுக்கணக்கான டன்கள் எடைகள் கொண்ட அந்த வெண்கல கதவுகளைச் செய்வதற்கு ஜனங்கள் தங்கள் ஜீவனே போகும் அளவுக்கு அதைச் செய்தார்கள். அந்த சிறந்த நகரத்திலே அதைச் சுற்றி திறப்பதற்கு ஒரு கூட்ட ஜனம் தேவையாயிருந்தன. யாரும் நேபுகாத்நேச்சாரைத் தொட முடியாது. ஆனால் ஒரு நாள் ஒரு இரவு அந்த விஞ்ஞான சுவர்களுக்குள்ளே அவர்களது நாட்களிலுள்ள ஆயுதங்களோடு தாங்கள் பாதுகாப்போடு இருக்கிறோம் என்ற எண்ணத்தோடு அவர்கள் குடித்து வெறித்திருக்கையில் அங்கே தான் சுவற்றின் மேல் எழுதின கையுறுப்பு தோன்றினது. அதோடு அது முடிந்து விட்டது. 48. ஓ-! மனிதன், தன்னையும், மற்ற மனிதர்களையும் பாதுகாப்புக்குள்ளாக வைக்கும் படிக்கு, தன்னுடைய சொந்த சாதனைகளின் அடையாளங்களின் மூலமாக முயற்சித்து இருக்கிறான். அது பார்ப்பதற்கு மனிதர்கள் ஏதோ ஒரு அடையாளத்தைத் தேடிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதாக தோற்றம் அளிக்கிறது. நிச்சயமாக அதற்கு ஒரு காரணம் இருக்கும். “மனிதனுக்கு உள்ளே இருக்கிற ஏதோ ஒன்று அவன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக எங்காவது ஒரு அடையாளத்தையோ, ஒரு காரணத்துக்காகவோ கூப்பிட்டுக் கொண்டிருக்கிறது.'' 49. அப்பொழுது கர்த்தர், "நான் அவர்களுக்கு நித்திய அடையாளத்தைக் கொடுப்பேன், நான் நித்திய அடையாளமாகிய சபையைக் கொடுப்பேன்" என்றார். அது ஒருவேளை சிறந்த கோபுரமாகவோ அல்லது பெரிதான சுவரைப் போன்றோ காணப்படாமல் இருக்கலாம். அவர், "ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவர் இம்மானுவேல் என்று அழைக்கப்படுவார்". அதுவே தேவனுடைய நித்திய அடையாளமாய் இருக்கும்”, என்றார். எவ்வளவு எளிதான ஒன்று. எவ்வளவு சிறிய ஒன்று. 50. நாம் அந்த சிறிய காரியங்களைக் கடந்து போய் அதைத் தள்ளி விடுகிறோம் என்று, நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா-? அவைகளோ தேவனுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவைகள். இந்தக் காலையிலே சபையானது, அதை கருத்தில் கொள்ளுமா-? நம்முடைய சாதனைகளாகிய பெரிய அமைப்புகள், மிகச் சிறந்த கட்டிடங்கள், சிறந்த வேலைப்பாடுகள் போன்றவற்றைக் கொண்டிருக்கிற நாம் அந்த சிறிய காரியங்களை அதாவது தேவனுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் நம்முடைய நித்திய சேருமிடத்திற்கு, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றை நாம் தள்ளிக் கொண்டு இருக்கிறோம். நாம் அந்த காரியங்களைத் தள்ளி விடுகிறோம். 51. தேவன்-! "நான் உங்களுக்கு ஒரு நித்திய அடையாளத்தைக் கொடுப்பேன்" "ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குழந்தையை சுமப்பாள்," என்று கூறுகிறார். 52. ஏன்-? ஏன் ஒரு குழந்தை -? அது ஏன் ஒரு குழந்தையாக இருக்க வேண்டும்-? சிருஷ்டி கர்த்தர் தாமே வந்து மனிதனுக்கு ஒரு அடையாளமாய் இருக்கும்படி அவருடைய சிருஷ்டியில் ஜீவிக்க வேண்டுமா-? அது ஏன் ஒரு குழந்தையாக இருக்க வேண்டும்-? யாக்கோபின் சொப்பனத்தைப் போன்று "நான் ஒரு பெரிய ஏணியை வைப்பேன், அல்லது, பரலோகத்தின் தாழ்வாரங்களிலிருந்து நான் ஒரு கயிற்றைக் கீழே விடுவேன். நீங்கள் அந்த கயிற்றைப் பிடித்துக் கொள்ளுங்கள், அல்லது கட்டிக் கொள்ளுங்கள், நான் உங்களுக்குப் பெலனையும் கொடுப்பேன், பின்னர் நான் உங்களை அப்படியே தூக்கிக் கொள்ளுவேன்", என்று ஏன் அவர் சொல்லியிருக்கக் கூடாது.-? 53. ஆனால் அவரோ மிகவும் சாதாரணமாக வந்தார். ஒரு குழந்தை பிறக்கும், அது ஒரு அடையாளமாயிருக்கும். அது வெறுமனே ஒரு அடையாளமல்ல, ஆனால் அது மேம்பட்ட ஒரு அடையாளமாயிருக்கும் என்று கூறினார். ஒரு குழந்தை, ஏன் விஞ்ஞானத்தின் அறிவாற்றலானது, அப்படிப்பட்ட சிந்தனைகளைக் குறித்து, அது சிரிக்கும். ஆனால் தேவனுக்கோ, அது ஒரு மேம்பட்ட அடையாளம். "ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி அந்தப் பிள்ளை இம்மானுவேல் என்று அழைக்கப்படும். அதற்கு "தேவன் நம்மோடு இருக்கிறார்" என்று அர்த்தமாம் அது தான் அந்த மேம்பட்ட அடையாளம். 54. பரலோகத்தின் தேவன் ஜனங்களோடு வாசம் செய்வதே மேம்பட்ட அடையாளமாய் இருக்கிறது. அது அந்த நாளுக்கானதாக மாத்திரமல்லாமல், இந்த நாளுக்காகவும், மற்றும் எல்லா நாட்களுக்காகவும், தேவன் தம்முடைய பிள்ளைகளோடு ஜீவிக்கிறார் என்பதற்கான அடையாளமாய் அது இருக்கும். இம்மானுவேல் தேவன் நம்மோடு இருக்கிறார். இது ஒரு மேம்பட்ட அடையாளம். இதுவே தேவன் கொடுத்த நித்திய அடையாளம். என்றென்றைக்குமான அடையாளம். 55. அவர் ஏன் மண்ணானார்-? அவருடைய சொந்த சிருஷ்டிப்பாகிய சாதாரண மண்ணாக ஏன் ஆனார்-? சிருஷ்டிகராகிய அவர், தமது சிருஷ்டிப்பாகிய மண்ணாக மாறினார். 56. மனிதன் பெரிய மகத்தான காரியத்தைச் செய்ய முயற்சிக்கிறான். ஆனால் தேவன் ஒரு அடையாளத்தைக் கொடுத்த போது, அது ஒரு சிறிய காரியமாயிருந்தது. மனிதன் பெரிய காரியங்களோடு இடைப்பட முயற்சிக்கிறான். தேவனோ சிறிய காரியத்தில் இடைப்படுகிறார். எல்லாரும் இந்த வழியே போகிறபடியால், நாமும் ஹாலிவுட் செய்கிறது போல செய்வோம் என்று கூற மனிதன் முயற்சிக்கிறான். 57. ஒரு குழந்தை பிறக்கும். சிறிய இம்மானுவேல் பிறப்பார். சிருஷ்டிப்பின் தேவனானவர் தனது சொந்த சிருஷ்டிப்பின் பாகமானார். தேவன் வானத்தையும், பூமியையும் உண்டாக்கின சிருஷ்டிகர். மண்ணையும், மரங்களையும், மற்றும் அனைத்துக் காரியங் களையும், உண்டாக்கின சிருஷ்டிகர் அவைகளின் பாகமானார். அவர் அவ்வழியின் ஊடாக ஒரு மானிடவர்க்கமாக வருவார். அது ஒரு அடையாளமாய் இருக்கும். 58. இப்பொழுது, அவர் வேறு ஏதாவது வழியில் வந்திருக்கக்கூடும். வருவதற்கு அவரிடத்திலுள்ள வேறெதாவது வழியில் அவரால் வந்திருக்க முடியும். 59. ஆனால் அவரோ ஒரு அடையாளத்தைக் கொடுக்கும்படி மேம்பட்ட அடையாளத்தைக் கொடுக்கும்படி வருவதற்கு இந்த வழியையே தெரிந்து கொண்டார். "ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவாள்" இப்பொழுது அது என்னத்திற்காக அவ்விதமாயிருந்தது-? என்ன காரணம்-? 60. அவர் ஏன் ஒரு தூதனாக ஆவதைத் தெரிந்து கொள்ளவில்லை-? அவரால் அதை செய்திருக்க முடியும். அவர் ஒரு முழு வளர்ச்சியடைந்த மனிதனாக வந்திருக்கமுடியும் அவர் தூதர்களுடனும், பரலோகவாசிகளுடனும் பரலோகத்தின் முழு மரியாதையுடனும், பரலோக தாழ்வாரங்களிலிருந்து தங்கத்தாலான ஏணியை பிடித்துக் கொண்டவராக தூதர்கள் வாத்திய இசையுடன் அவர் கீழே இறங்கி வந்திருக்கலாம். அவரால் அதை செய்திருக்கக்கூடும். 61. ஆனால், அவரோ நான் உங்களுக்கு ஒரு அடையாளத்தை ஒரு மேம்பட்ட அடையாளத்தை என்றென்றைக்குமான அடையாளத்தைக் கொடுப்பேன். ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்" என்றார். 62. இந்த பிள்ளை பிறக்கும்படியான ஒரு ஸ்தலத்தை தெரிந்தெடுக்க வேண்டியதாயிற்று. ஒரு முழு பரலோக மரியாதையுடன், அவர் அந்த ஏணியின் வழியாக இறங்கி வந்து இருக்கலாம். அவர் பரலோகத்திலிருந்து ஒரு தூதனைப் போன்று வந்திருக்கலாம். அல்லது ஒரு முதிர்ச்சியடைந்த மனிதனாக கீழே வந்திருக்கலாம். மேலும் ஒரு ராஜாவின் அரண்மனையிலுங்கூட அவர் வந்திருக்க முடியும். 63. ஆனால் அவர் நான் ஒரு அடையாளத்தைக் கொடுப்பேன் என்றார். அந்த அடையாளம் மேய்ப்பர்களுக்குக் கொடுக்கப்பட்டது. பிள்ளையைத் துணிகளிலே சுற்றி முன்னனையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள். இம்மானுவேல் ஒரு எருக்குவியலின் மேல், களஞ்சியத்தின் துர்நாற்றத்திலே, உடுத்திக் கொள்ள வஸ்திரம் இல்லாதவராக பிறப்பது அந்த மேம்பட்ட அடையாளம். பிசாசு எப்பொழுதும் காரியங்களைப் பெரிதாகவும் பிரகாசமானதாகவும் ஆக்க விரும்புகிறான். தேவனோ காரியங்களை எளிமையுள்ளதாக வைத்துக் கொள்கிறார். நீங்கள் பிள்ளையைத் துணிகளிலே சுற்றி, முன்னனையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள். அது ஒரு அடையாளமாக ஒரு மேம்பட்ட அடையாளமாக இருக்கும். அவர் பூமியில் இருந்த பொழுது, மிகவும் ஏழ்மையுள்ளவராக இருந்தார். கடினமான நேரத்தைக் குறித்து நாம் எப்படிப் பேசுவது.-? யார் இந்த சிறிய ஒருவர்-? அது யேகோவா. 64. யேகோவா தேவன் மனிதனாக ஆனார். நம்முடைய இனத்தை அவர் எடுத்துக் கொண்டவராக தேவன் என்னப்படுவதிலிருந்து, தம்மைக் கடந்து வரப் பண்ணினவராக மனிதனாக ஆனார். அங்கே தான் அந்த அடையாளம். அவர் தேவனாக இருந்தார். மனிதனாக ஆனார். ஒரு ஐசுவரியவானாக அல்ல. ஆனால் ஏழ்மையான மனிதனாக இது அந்த மேம்பட்ட அடையாளமாயிருக்கிறது. நீங்கள் அடையாளத்தைக் கேட்டீர்கள் என்ற தேவன் மேலும், "நான் உங்களுக்கு என்றென்றைக்குமான ஒரு அடையாளத்தைக் கொடுக்கிறேன்" என்றார். 65. நான் கூறினது போன்று அவர் வேறு விதமாக வந்திருக்கலாம். ஆனால் அவர் குழந்தையாக வந்தார். அவர் ஏன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்-? முதல் கிறிஸ்துமஸ் அன்று காலையில், அந்த மாட்டுத் தொழுவத்திலே, முன்னனையில் கிடத்தப்பட்டிருந்த, அவர் தனது பற்களில்லாத, சிறிய வாயைத் திறந்து, சத்தமிடுகையில், அவரது சத்தத்திலிருந்து வந்த அந்த முதலாவது கூக்குரல், அது தேவன் அழுகிறதாயிருந்தது. யேகோவா ஒரு மனிதனாக அழுகிறதாக இருந்தது. தேவனிடத் திலிருந்து வந்த ஒவ்வொரு விதத்திலும், மனிதராயிருக்கிற ஒருவர், அழுகிறதாயிருந்தது. இந்த உலகத்திற்கு ஒன்றுமில்லாதவராக வந்து, இன்னமும், மனிதனாக இருக்கிறார். 66. அவர் முன்னனையிலே ஒரு குழந்தையைப் போல அழுதார். வீதியிலே ஒரு பையனைப் போல விளையாடினார். ஒரு மனிதனைப் போல கடிணமாக உழைத்தார். ஆனால், இருப்பினும் அவர், இம்மானுவேலாக இருந்தார். இதுவே அந்த மேம்பட்ட அடையாளம். தேவன், அவர் உண்டாக்கின, சிருஷ்டிப்பில் வாசம் செய்வது. இது உங்களுக்கு அடையாளமாயிருக்கும் என்று சொல்லப்பட்ட அந்த மேம்பட்ட அடையாளம். 67. அவர் இந்த பூமிக்கு வந்த போது, மிகவும் ஏழ்மையுள்ளவராயிருந்தார். அவர் இரவல் வாங்கப்பட்ட ஒரு கர்ப்பப்பையிலே ஒரு ஸ்திரியின் இரவல் வாங்கப்பட்ட ஒரு கர்ப்பப்பையின் மூலமாக, வந்தார். அவரை அடக்கம் பண்ணுவதற்கும் ஒரு கல்லறை இரவல் வாங்க வேண்டியிருந்தது. தேவனே-! இனச் சேர்க்கையின்றி, ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள். யேகோவா என்றென்றைக்குமான ஒரு அடையாளத்தைத் தரத்தக்கதாக, தன்னுடைய கடமையைச் செய்யும்படிக்கு, மரியாள் என்னும் ஒரு ஸ்திரியின் கர்ப்பப்பையை இரவல் வாங்கினார். பூமியிலே அவர் ஏழ்மையைள்ளவராக இருந்து, முப்பத்து மூன்றரை வருடம் அவருடைய ஊழியத்தை முடித்த பிறகு, அவரை அடக்கம் செய்வதற்கும், ஒரு கல்லறையை இரவல் வாங்க வேண்டியிருந்தது. உங்களால் அதைக் கற்பனை செய்ய முடிகிறதா-? பரிசுத்த கருவுறுதலைக் குறித்துப் பேசுகிறீர்களே-? நீங்கள் கூறுவதன் அர்த்தம் என்ன-? எப்படியாயினும், (பரிசுத்த கருவுறுதல் இது ஒரு ரோமன் கத்தோலிக்க வழி வந்த உபதேசம். மரியாள், மூலப் பாவத்திலிருந்து, நீங்கலாக்கப்பட்ட பரிசுத்தவாட்டி என்று சொல்லப்படுகிறது - ஆசி ) 68. உங்களால் அந்த உண்மையான அடையாளத்தைக் காண முடியவில்லையா-? அது யேகோவா நம்மில் ஒருவராக ஆனதே யேகோவா தேவன் இந்த பூமியிலே தனக்கென்று ஒரு இடமில்லாமல், திரிகின்றவராக, அவர் உண்டாக்கின விதத்திலே, ஒரு யாத்திரிகனாக, புறக்கணிக்கப்பட்டவராக, தள்ளப்பட்டவராக, பரியாசம் பண்ணப்பட்டவராக இருந்தார். அவிசுவாசிக்கு ஒரு தடைக்கல்லாகவும், தாக்குகின்ற ஒரு கன்மலையாகவும், மதரீதியான உலகத்திற்கு, ஒரு சத்துருவாகவும் இருந்தார். ஆனால், ஒரு விசுவாசிக்கு, "தேவன் நம்மோடிருக்கிறார்." என்ற மேம்பட்ட அடையாளமாகிய, நித்திய அடையாளமாக இருந்தார். நீங்கள் அதைக்காண முடிகிறதா-?. தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார். அவர் தம்மையே இந்த உலகத்திற்கு அர்ப்பணித்தவராக, தனக்கென்று ஒரு இடமில்லாமல் திரிகிறவராக அர்ப்பணித்தார். அவர் வேறு ஏதாவது வழியில் பூமிக்கு வந்திருக்கலாம். ஆனால் அவர் இந்த வழியையே தெரிந்து கொண்டார். இதைக் கவனியுங்கள். இதைத்தவற விட வேண்டாம். 69. மானிட வர்க்கத்திற்கு இது ஒரு வசீகரமானதாக இருக்கும் என்பதைத் தேவன் தம்முடைய சிந்தையில் கொண்டிருந்தார் என்று நான் நினைக்கிறேன். ஒரு விசுவாசிக்கும் அது அவ்விதமே உள்ளது. நம்முடைய தேவன் நம்மில் ஒருவராக ஆகும் போது அது வசீகரிக்கக் கூடியதாய் இருக்கிறது. ஆனால் அது விரைப்புத்தன்மை கொண்டவர்களுக்கோ, தேவபக்தியற்றவர்களுக்கோ, அது ஒரு தடைக்கல்லாக இருக்கிறது.. 69. எல்லாக் காரியங்களையும் சிருஷ்டித்த நம்முடைய தேவன், அவர் தம்மைக் கடந்து வரப்பண்ணி நம்மில் ஒருவராக இருப்பது, நம்மைப் போல மண்ணாக ஆகி, அவர் நம்முடைய இனமாக மாறுவது. ஒரு மானிட வர்க்கமானார், என்பது மானிட வர்க்கத்துக்கு வசீகரிக்கக்கூடிய ஒன்றாய்த் தோன்றும் என்று தேவன் கருதினார். அது மீண்டும் ஒரு தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றினது. தீர்க்கதரிசிகள் அதைக் கண்டார்கள். 70. மற்றும் ஒரு காரியம், வார்த்தை மண்ணாக, மாம்சமாக மாறி நமது மத்தியில் வாசம் செய்தது. வார்த்தையாகிய யேகோவா மனிதனாக மாறினார். மண்ணாக மாறினார். மற்றும் நம்மோடுகூட வாசம் செய்தார். ஓ-! நித்திய அடையாளம் ஒரு போதும் முடிவு பெறாது. ஓ, தேவனே நம்மில் ஒருவராக மாறின அந்த நித்திய அடையாளத்தை, நாம் எண்ணிப்பார்க்கும் பொழுது. அது எல்லா அடையாளங்களுக்கும் மேம்பட்ட அடையாளமா யிருக்கிறது. 71. பின்னர், மீண்டுமாய் அவர் ஆபிரகாமின் வித்தாக, இருக்கவேண்டியதாக இருந்தது. ஆபிரகாம் ஏவாளின் வித்தாக இருந்தான். சர்ப்பத்தின் தலை நசுக்கக் கூடிய அந்த, ஸ்திரீயின் வித்து, ஆனால், நீங்கள் இதைப் பிடித்துக் கொள்ளக் கூடுமானால், ஆபிரகாம் தேவனில் விசுவாசம் கொண்டிருந்தான். அது மாம்சமான மனிதனையும், தேவனுடைய ஆவியையும் இணைத்தது. அங்கே தான் விசுவாசம் வருகிறது. அதன் நிமித்தமே அவர் ஆபிரஹாமின் வித்தாக இருந்தார். எல்லா மாம்சமும் அல்ல, ஆனால் மாம்சமும் ஆவியும் இணைந்திருந்த அவர் ஆபிரகாமின் வித்தாக இருந்தார். தேவன் தம்மை, எல்லா பொல்லாங்கானவைகளையும், கிழித்து வேரோடே வெளியே எடுத்தவராக, அவர் உண்டாக்கின மாம்சத்தை கட்டுக்குள் கொண்டு வந்தவராக உங்களோடு ஒரு துணையாக ஜீவித்தார். 72. இன்னொரு காரியம் என்னவென்றால், அவருடைய நியமங்களில் ஒன்றையாவது அவர் கறைப்படுத்தவோ முரண்பாடகச் செய்யவோ இல்லை. அவரால் அதைச் செய்யவும் முடியாது. எனவே ஒரு கன்னியாக நான் உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுக்கிறேன். ஒரு டைட்டானிக் அல்ல, அல்லது ஐக்கிய நாடுகளோ அல்ல, ஆனால், நான் உங்களுக்கு ஒரு பாதுகாப்பின் அடையாளத்தைக் கொடுக்கிறேன். ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி, ஒரு குமாரனைப் பெறுவாள், அவர் இம்மானுவேல் என்று அழைக்கப் படுவார். அதுவே அந்த அடையாளம். ஆம்-!. 73. நீங்கள் தேவனுடைய மீட்பின் சட்டங்களைக் கவனிப்பீர்களென்றால், போவாஸ் மற்றும் நகோமியின் காரியத்தில் இருந்தது போல, அது ஒரு நெருங்கிய உறவின் முறையானாக இருந்தாக வேண்டும். மனிதனை மீட்கும்படியான இருந்த ஒரே வழி என்னவென்றால், அது தேவன் உறவின்படிதாயிருந்தது. நீங்கள் இதைக் கவனிக்க விரும்புகிறேன். அவர் ஒரு போதும் ஐசுவரியவானுக்கோ, மகத்தானவர்களுக்கோ, ஒரு நெருங்கிய இனத்தானாக மாறவில்லை. ஆனால் அவரோ, ஒரு தொழுவத்திலே, ஒரு குழந்தைகள் சுற்றப்படக் கூடிய துணிகளிலே சுற்றப்பட்டவராக, ஒரு மனிதனாக அல்ல, ஒரு குழந்தையாக அவர் அங்கே பிறந்தார். அவர் சிருஷ்டிகள் அனைத்திற்கும், தேவனாய் இருந்தார். அவர் ஒரு முழு வளர்ச்சியடைந்த மனிதனாக வராமல், அவ்விதமே செய்ய தெரிந்து கொண்டார். சிறு குழந்தைகளுக்குண்டான, எல்லா கஷ்டமான உணர்வுகளையும் பெற்றவராக அவரும் வந்தார். வாலிபப் பிள்ளைகளுக்கு உண்டான, எல்லா உணர்வுகளின் வழியேயும் அவரும் வந்தார். ஒரு மனிதனாக, பிசாசினுடைய எல்லா கண்ணிகளுக்கெதிரான போராட்டங்களின் வழியாகவும் அவர் வந்தார். எல்லாக் காலங்களுக்கும், அனைத்துத் தரப்பு மக்களுக்கும், ஏழை, பணக்காரர் அனைத்து மக்களுக்கும் எல்லாக் காலங்களின் மக்களுக்கும், ஒரு வழியை உண்டாக்கும்படியாக அவரும் அவ்வழியே வந்தார். அவருடைய ஏழ்மையின் மூலமாக, நாம் ஐசுவரியவான்களாகி, ராஜ்ஜியத்திலே, அவருடைய உடன் சுதந்தரராகும் பொருட்டு, அவர் ஏழ்மையைத் தரித்தார். ஒரு அடையாளம் கொடுக்கப்படும். அவர் தன்னையே கடந்துவரப்பண்ணி தாம் இருந்த நிலைமையினின்று, வேறுபட்ட ஒரு நிலைமைக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டார். இப்பொழுது ஒரு மேம்பட்ட அடையாளம் ஒரு குழந்தையாக அழுவது, ஒரு பையனாக விளையாடுவது, ஒரு மனிதனாக கஷ்டப்படுவது, ஆனால் அவரோ, நம்மைப் போல நம்முடைய ஜீவிய காலத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், நாம் செய்வது போன்றே ஜீவியம் செய்த தேவனாக இருந்தார். 74. தேவன், அவர் தேவனாய் இருந்தார், என்பதற்கான அநேக அடையாளங்களைக் கொடுத்திருக்கிறார், என்பதை, நீங்கள் அறிவீர்கள். அவர் நியாயத்தீர்ப்பின் தேவனாய் இருந்தார், என்பதற்கும், அவர் தேவனாய் இருந்தார் என்பதற்கும், இந்த உலகத்திற்கு ஜலப்பிரளயத்தை ஒரு அடையாளமாக அவர் கொடுத்தார். நோவாவின் நாட்களிலே அவர் ஜனங்களைத் தண்ணீருக்குள் மூழ்கச் செய்து, நீதிமான்களை பேழையின் மூலமாக அதன் மேல் மிதக்கவும் செய்தார். அவர் நீதியுள்ளவர் என்பதற்கு, அதுவே அடையாளம். நியாயத்தீர்ப்புண்டு என்பதற்கும், நியாயத்தீர்ப்பு நிச்சயம் என்பதற்கும், ஒரு அடையாளம். ஒவ்வொரு மனந்திரும்பாத பாவியும், நியாயத்தீர்ப்பிலே தண்டிக்கப்படுவார்கள். என்றும், நீதிமான்கள், தேவனுடைய இரக்கத்தினால், இரட்சிக்கப்படுவார்கள் என்பதற்கும், அது ஒரு அடையாளம். 75. மற்றும் ஒரு அடையாளத்தை அவர் எரிகிற முட்செடியிலே கொடுத்தார். ஓடிப்போகிற தீர்க்கதரிசியை அவர் பிடித்து, என் ஜனங்களின் கூக்குரலைக் கேட்டேன், என்னுடைய உடன்படிக்கையை நினைவுகூர்ந்தேன், என்று அவர் சொன்ன போது, அது என்னவாய் இருந்தது-? தாம் உடன்படிக்கையைக் காத்துக் கொள்கிற தேவன் என்பதற்கும், அவர் தாம் சொன்ன அவர் உண்டு பண்ணின ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும், நினைவு கூர்ந்தார், என்பதற்குமாக மற்றும் ஒரு அடையாளத்தை அவர் கொடுத்தார். நான் இறங்கி வந்து அவர்களை விடுவிப்பேன், என்று எரிகிற முட்செடியிலே, அவர் ஒரு அடையாளத்தைக் கொடுத்தார். 76. தேவனை அவருடைய வழியின் கிரியைகளிலே அவரைக் கவனியுங்கள். அவர் வானங்களையும், பூமியையும் உண்டாக்கின போது, அவர் தூதர்களை ஒன்று கூடச் செய்து, "நாம்" என்று சொன்னார். வேதவாக்கியங்களின் ஒவ்வொரு இடங்களிலும், அவர் ஏதாவது செய்தாரானால், பெருவாரியாக நான் அல்ல, ஆனால் “பிதாவே”-! என்று சொன்னார். 77. ஆனால் மீட்பின் திட்டம் என்று ஒன்று வந்த போது, அவர் தனிமையிலே வந்தார். அவருடன் யாருமே இல்லை. வரக்கூடிய நபர் அவர் ஒருவரைத் தவிர, வேறு யாருமில்லை. ஒரு தூதனால் அதைச் செய்திருக்க முடியாது. அவருடைய குமாரன் என்று அழைக்கப்பட்ட எந்த ஒரு மனிதனாலும், அதைச் செய்திருக்க முடியாது. அல்லது ஒரு பரிசுத்தக்கன்னி அல்லது, பரிசுத்தத்தாய் அல்லது யாரோ ஒரு புனிதர் என்று அழைக்கப்பட்ட எவரொருவராலும் அதைச் செய்திருக்க முடியாது. தேவனே வர வேண்டியவராயிருந்தார். நான் உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பேன். " இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி, ஒரு குமாரனைப் பெறுவாள், அவர் இம்மானுவேல் என்னப்படுவார்." தேவன் நம்மோடு இருக்கிறார்." என்பதே அந்த மேம்பட்ட அடையாளம். தேவன் அவருடைய ஜனத்துக்குள் இருந்தார். தேவன் அவருடைய ஜனமாகவே மாறினார். தேவனும் மனிதனும் ஒன்றாக ஆனார்கள். ஒரு அடையாளம். இந்த உலகத்திற்கு ஒரு தடைக்கல். ஆனால் விசுவாசிக்கோ ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு நம்பிக்கையாக, ஒரு அடையாளம். தூஷிக்கப்படத்தக்கதான ஒரு அடையாளம்... 78. அவர் நிரூபித்துக் காட்டின இன்னொரு நேரம் அவருக்கு உண்டாயிருந்தது. ஜலப் பிரளயத்தின்போது, அவர் நியாயத்தீர்ப்பின் தேவன் என்றும், அவருடைய கட்டளை களைக் கைக்கொள்கிறவர்களுக்கு அவர் இரக்கத்தின் தேவன் என்றும், அவர் நிரூபித்தார். 79. அவர் அந்த எரிகின்ற முட்செடியிலே, அவர் செய்கின்ற ஒவ்வொரு வாக்குத்தத்தங்-களையும், அவர் காத்துக்கொள்கிறார் என்பதை அவர் அடையாளமாகக் காண்பித்தார். 80. அந்த செங்கடலிலே சரியானவற்றைச் செய்து அவருடைய கற்பனைகளைப் பின் தொடர வேண்டும் என்று முயற்சித்தவர்களுக்கு, அவர் ஒரு வழியை உண்டாக்குவார் என்பதை, அவர் காண்பித்தார்.அதைத் தடுத்துப்போடுவது எதுவாக இருந்தாலும் சரி, தேவன் அந்த சிவந்த சமுத்திரத்தண்டையிலே கடலையும் விலக்க முடியும் என்பதான ஒரு அடையாளத்தைக் கொடுத்தார். ஒவ்வொரு சோதனையின் போதும் அவர் தப்பித்துக் கொள்ள ஒரு வழியையும் உண்டு பண்ணுவார். தாயார் அதை விசுவாசிப்பதில்லை, தந்தையார் அதை விசுவாசிப்பதில்லை, சபையானது அதை விசுவாசிப்பதில்லை, என்று கூறுகிறீர்கள். யார் விசுவாசிக்கவில்லை என்றாலும் நான் அதைக் குறித்து கவலைப்பட மாட்டேன். நீங்கள் விசுவாசிப்பீர்கள் என்றால், தேவன் தப்பித்துக் கொள்ள ஒரு வழியை உண்டாக்குவார். அவர் செய்வார் என்பதற்கான அடையாளத்தையும் அவர் கொடுத்து இருக்கிறார். தேவன் எதை வாக்களித்தாரோ, அந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு நேராக அவர்கள் பிரயாணமாய் இருந்தார்கள் ஆனால் சிவந்த சமுத்திரம் அவர்களை நிறுத்தினது. அங்கே தான் அவர்கள் தொல்லைக்குள்ளானார்கள். அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அறியாதிருந்தனர். ஒவ்வொரு சோதனையிலும் ஒவ்வொரு பரீட்சையிலும் தப்பித்துக்கொள்ளும் வழியை அவர் உண்டாக்குவார், என்பதைத் தேவன் காண்பித்தார். உங்களால் புகைபிடிப்பதை விட்டுவிட முடியவில்லையா-? ஒரு முறை தேவனை அழைத்துக்கொண்டு போங்கள். பொய் சொல்வதை உங்களால் விட்டுவிட முடியவில்லையா-? திருடுவதை உங்களால் விட முடியவில்லையா-? கோபப்படுவதை உங்களால் விட்டுவிட முடியவில்லையா-? உங்களோடு தேவனை ஒரு முறை அழைத்துக் கொண்டு போங்கள். உங்களால் ஆலயத்துக்கு போக முடியாதது போல அல்லது வேறெங்காகிலும் போக முடியாதது போல உணர்வீர்களானால், தேவனை உங்களோடுகூட அழைத்துச் செல்லுங்கள். அவருடைய வாக்குத்தத்தங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த சிவந்த சமுத்திரத்-தண்டையிலே, அவரால் தப்பித்துக் கொள்ளும் போக்கை உண்டு பண்ண முடியும், என்பதை நிரூபித்தார். தேவன் அநேக அடையாளங்களைக் கொடுத்திருக்கிறார். 81. அந்த இரவன்று அவர், மேய்ப்பர்களிடத்தில், பெத்லகேமிற்குப் போங்கள்-!, ஏனெனில், இன்று கிறிஸ்து என்னும் இரட்சகர், பிறந்திருக்கிறார். அபிஷேகம் பண்ணப்பட்ட தேவன், கிறிஸ்து இந்நாளிலே ஒரு ஸ்திரீயின் மூலமாகப்பிறந்திருக்கின்றார். என்றார். "தேவனே-! 82. இப்பொழுது அவளை ஒரு தெய்வமாக ஆக்கவில்லை. சுவிஷேசத்தைப் பிரசிங்கும் படியாக, அவர் இந்த சரீரத்தை இரவலாக வாங்கினது போலவே, ஸ்திரீயின் இடத்திலிருந்து, கர்ப்பப்பையை, இரவலாக வாங்கினார். அவர் இன்னமும், இம்மானுவேலாய் இருக்கின்றபடியால், தேவன் அவருடைய ஜனங்களோடு இருக்கிறார், என்ற ஒரு அடையாளமாக இன்னமும் இருக்கிறபடியால், உங்கள் மூலமாக, செய்ய வேண்டிய காரியங்களைச் செய்வதற்காக அவர் உங்களுடைய சரீரத்தை இரவல் வாங்குகிற விதமாக அவர் செய்தார். தேவன் அவருடைய ஜனங்கள் மத்தியில், வாசம் செய்வது, அந்த மேம்பட்ட என்றென்றைக்குமான அடையாளம். அது ஒரு போதும் தவறிப் போகாது. அது எப்பொழுதுமே அடையாளமாயிருக்கும். 83. நீங்கள் அடையாளங்களைக் குறித்துப் பேசுகிறீர்கள். இந்த ஒன்றைக் குறித்து என்ன-? பாஷைகளில் பேசுகிற அடையாளம் தீர்க்கதரிசனம் உரைக்கிற அடையாளம், ஏதாவது இயற்கைக்கு மேம்பட்டதான அடையாளம் போன்ற வேறு ஏதாவது அடையாளத்திற்கு அடையாளத்தை நீங்கள் பெறுவதற்கு முன்னர் என்றென்றைக்குமான நித்தியமான அந்த மூல அடையாளத்திற்கு நீங்கள் திரும்பிப் போய் ஆக வேண்டும். காலங்களின் ஊடாக இருந்த அஸ்திபாரத்தின் காலங்களின் ஊடாக இருக்கிற கன்மலையின் அஸ்திபாரத்தின் மேல், அதனோடு துவங்கும்படியாக, அதற்கு நேராகுங்கள். ஒன்றும் அதைத் தொட முடியாது பாதாளத்தின் வாசல்கள் அதற்கு எதிராய் இருக்கும். ஆனால் அதை மேற் கொள்ள முடியாது ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள் என்கிற அந்த அடையாளத்தை பெற்றுக்கொள்ளுங்கள். 84. மேலும் அவர் அந்த மேய்ப்பர்களிடத்தில், இங்கே நீங்கள் அவரை இவ்விதமாக இருக்கக் காண்பீர்கள். அவரை ஒரு தொழுவத்திலே, ஒரு களஞ்சியத்தில், கந்தைத் துணிகளால், சுற்றப்பட்டவராக இருப்பார். அவர் நம் மத்தியில் இருக்கிற, தேவனாய் இருக்கிறபடியால், நீங்கள் அவரை நோக்கிப் பார்க்கும் பொழுது, விசுவாசியுங்கள் என்றார். 85. அந்த அடையாளமானது, மேய்ப்பர்களுக்கு மட்டுமானது அல்ல. ஆனால், அவரை நோக்கிப் பார்த்து, அவர் யார் என்பதைக் கண்டு கொள்ளும்படியாக, இந்த முழு உலகத்துக்கும் கொடுக்கப்பட்ட ஒரு அடையாளமாக இருந்தது. அது, தேவன் நம்மோடு இருக்கிறார். இம்மானுவேல் என்பதாக இருந்தது. 86. அவர் இந்தப் பூமியின் மேல் இருந்த போது, அவர் தேவன் என்பதை நிரூபித்தார். தேவனுடைய அடையாளங்கள் அவரைப் பின்தொடர்ந்தபடியினால், தேவன் அவருக்குள் இருந்தார் என்பதை நிரூபித்தார். அவர் நான் என் பிதாவின் கிரியைகளைச் செய்யாதிருந்தால், நீங்கள் அதை விசுவாசிக்க வேண்டியதில்லை. செய்தேனேயாகில் நீங்கள் என்னை விசுவாசியாவிட்டாலும், நான் செய்கிற கிரியைகளையாவது, விசுவாசியுங்கள். நான் செய்கின்ற கிரியைகளாகிய அடையாளத்தை விசுவாசியுங்கள் என்றார். இம்மானுவேல், நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம். என் பிதா என்னை அனுப்பினார். அவர் என்னை அனுப்பியது போல, நான் உங்களை அனுப்புகிறேன். என்னை அனுப்பின பிதா என்னோடு கூட இருக்கிறார். அவர் எனக்குள்ளாக இருந்து, தாமாக கிரியைகளைச் செய்கிறார். அது தேவன் மாம்சத்தில் இருப்பதாகும். 87. அழிவிற்கு முன்னதாக, அதன் ருசியை லோத்து பெற்றுக் கொள்ளவில்லையா-? தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டு, ஒரு கன்றுக் குட்டியின் மாம்சத்தைப் புசித்து, ஒரு பசுவின் பாலைக் குடித்து, நெருப்பில் சுட்ட அப்பத்தைப் புசித்த போதும். மேலும், அவரது முதுகுப்புறம் கூடாரம் இருக்கும்படியாக அவர் நின்று கொண்டிருந்து, 'நான்' என்னும் பிரதிப்பெயர் சொல்லை உபயோகித்தார். "ஆபிரகாம் உலகத்திற்கு சுதந்திரவாளியாய் இருப்பதாக காண்கிற நான்.'', வேறு வார்த்தைகளில் கூறினால், “நான் அவனுக்கு அதை அறியும்படி செய்வேன்” என்றார். 88. அவர் யார்-? மேலும் அவர், "ஆபிரகாமே, உன் மனைவியாகிய சாராள் எங்கே-?" என்றார். அது அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கினது. கிறிஸ்துவின் ஒரு முன் உருவமாக தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார். அவன், அவள் உமக்குப் பின்னால் இருக்கும் கூடாரத்தில் இருக்கிறாள்" என்றான். சாராள் நகைத்தாள். அப்பொழுது அவர், "சாராள் ஏன் நகைத்தாள்-?" என்றார். 89. இம்மானுவேல், ஒரு ஆவிக்குரிய சரீரமாக தோன்றுவதற்குப் பதிலாக ஒரு ஸ்திரீயின் கர்ப்பத்தின் வழியாக வந்த போது அவர், "லோத்தின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரன் வரும் போதும் நடக்கும்” என்றார். 90. அவர் பூமியின் மேல் இருந்தபொழுது, அந்த அப்போஸ்தலர்கள், சுவிசேஷத்தோடு முன்னேறிச் சென்ற போது, பரலோகத்தின் படிக்கட்டுகளிலும், மகிமை தேசத்தின் நடைபாதைகளிலும், தேவ தூதர்கள் நின்று கொண்டு அதை நோக்கிப் பார்த்தனர். நீங்கள் வேத வாக்கியங்களைக் குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறதை நான் காண்கிறேன். 1-தீமோ 3:16-ம் வசனத்தைக் குறித்துக் கொள்ளவும். அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார். தேவதூதர்களால் காணப்பட்டார். உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார்..'' தேவனை பார்க்கும்படி தேவதூதர்கள் எழும்பினர். பரலோகத்தின் மகிமைகளிலே, அவர் ஒரு அக்கினி ஸ்தம்பமாக, அங்கே வீற்றிருந்தபோது, இவர்கள் தங்கள் கரங்களை அவருக்கு முன்பாக அசைத்து, "பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்" என்று ஆர்ப்பரித்தவர்- களாயிருந்தனர். அவர் மனிதனாக ஆனபொழுது. தேவதூதர்கள் வந்து, யேகோவாவா மாம்சத்தில் வெளிப்பட்டதை நோக்கிப்பார்த்தனர். நிச்சயமாகவே, "தேவபக்திக்குரிய இரகசியமானது யவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது." 91. "நான் உங்களுக்கு என்றென்றைக்குமான ஒரு அடையாளத்தைக் கொடுப்பேன்", ஏனெனில் தேவன் நமது மத்தியில் மாம்சமாக ஆக்கப்பட்டார். அவர் மாம்சத்தில் வாசம் செய்தார். அது என்றென்றைக்குமான ஒரு அடையாளமாயிருக்கும். நோக்கிப் பார்த்து விசுவாசிப்பதற்கு அது மேய்ப்பர்களுக்கு மாத்திரம் அல்ல, ஆனால், பிரான்ஹாம் கூடாரமே அது உங்களுக்காகவும், இந்த கொடூரமான உலகத்திற்காகவும் தான், அது தான் தேவன் என்று விசுவாசிக்கத்தக்கதான அடையளமாயிருக்கும். தேவன் அந்த அடையாளத்தைக் கொடுத்தார். இயேசு, "ஜீவிக்கிற பிதா என்னை அனுப்பி, என்னோடு வந்து, எனக்குள் இருந்தது போல, ஜீவிக்கிற பிதா உங்களோடு கூட வந்து உங்களுக்குள் இருக்கும்படியாக நான் உங்களை அனுப்புகிறேன். அதுவே என்றென்றைக்குமான அடையாளம். விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும். இதோ, உலகத்தின் முடிவு பரியந்தம் நான் உங்களோடும் உங்களுக்குள்ளும் இருப்பேன். நான் உங்களோடு இருப்பேன். உலகத்தின் முடிவு பரியந்தம் நான் அங்கே உங்களோடு இருப்பேன்" என்றார். 92. சிலர், நான் ஏற்கெனவே கூறினது போன்று, அவரை தேவனுக்கு சற்று குறைவானவராக ஆக்க விரும்புகின்றனர். அவர் மனிதனாக இருந்தார். தேவன் ஒரு மனிதனை உபயோகித்துக் கொண்டிருந்தார். வேதம் குறிப்பிடுகிறபடி "ஒரு குமாரன் மூலமாக எல்லாரும் விழுந்து போனார்கள், கீழ்ப்படிதலுள்ள குமாரன் மூலமாக, ஒரு குமாரன் மூலமாக, ஒரு கீழ்ப்படிதலுள்ள குமாரன் மூலமாக, விசுவாசிக்கிற அனைவரும் பிழைப்பார்கள்" மேலும், "அவர் மூலமாக அனேக குமாரர்களைக் கொண்டு வரும் பொருட்டு...'' என்பதை அவர் மூலமாக நிறைவேற்றும்படிக்கு தேவன், தாம் சிருஷ்டித்த ஒரு மாம்சத்தைத் தாமே உபயோகித்துக் கொண்டிருந்தார். அடையாளமாயிருக்கும் என்று கூறப்பட்ட ஒரு அடையாளம், "தேவன் நம்மோடு இருக்கிறார்" என்பதே. அவர் தம்மை "மனுஷகுமாரன்" என்றும், தம்மையே மனுஷனாக சாதாரணமான ஒரு மனிதனாகக் குறிப்பிட்டுக் கூறுவதை அவ்வளவாக விரும்பினார். "நான் ஒன்றுமில்லை, குமாரன் தாமாக ஒன்றும் செய்யார்.” ஆனால் அது அவருக்குள் இருந்த பிதாவே, இம்மானுவேலாகிய தேவன். 93. அந்தக் குழந்தை, தேவன், அது யேகோவா தேவன். அந்த சிறிய குழந்தை அழுதது, அது யேகோவா. உங்களால் அதைக் காண முடிகிறதா-? தேவன் ஒரு குழந்தைக்குள் ஜீவித்தல் 94. தேவன் ஒரு பதின்பருவத்தில் ஜீவித்தல். அவர் எப்படிப்பட்ட பதின்பருவ நபராயிருந்தார்-? அவர் ஒரு மாதிரியை உண்டாக்கினார். அவருடைய தகப்பனாலும் தாயாலும் அவர் தொலைக்கப்பட்டப்போது, அவர்கள் அவரைக் கண்டுபிடிக்கும்படி தேடுகையில் தேவாலயத்திலே அவரைக் கண்டார்கள். ஒரு பதின்பருவ நபராக அவர் என்ன கூறினார் -? "உங்களுக்குத் தெரியாதா-? "நான் என் பிதாவுக்கடுத்த அலுவல்களில் நான் இருக்க வேண்டும்” என அறியீர்களா-? பதின்பருவத்திற்கு ஒரு மாதிரியாயிருந்தார். 95. ஒரு மனிதனாக, உலகத்தின் சகல ஆடம்பரங்களும், கொடுக்கப்பட்டதோடு , சகல மனுஷர்களைக் காட்டிலும், பெரியவனாகவும், சகல மனுஷர்களைக் காட்டிலும் ஐசுவரியவானாகவும், மாறத்தக்கதாக எல்லாக் காரியங்களும், சரியாக அவரின் கரத்தின் கீழ் அடங்கியிருந்தன. வாயில் நாணயத்தைக் கொண்டு வைத்திருக்கிற மீன் எங்கே இருக்கிறதென்று யாரால் சொல்லக் கூடும்-? கிணற்றிலிருந்து எடுக்கப்பட்ட சிறந்த தண்ணீரை திராட்சைரசமாக யாரால் மாற்றக்கூடும்-? அவர் எதையெல்லாம் மாற்ற வேண்டுமென்று நினைத்தாரோ, அதை எல்லாவற்றையும் மாற்ற அவரால் முடிந்தது. ஐந்து அப்பங்களை எடுத்து ஐயாயிரம் பேர்களைப் போஷிக்க அவருக்கு முடிந்தது அவருடைய கரத்தின் வல்லமையால், அவரால் ஒரு சிறந்த மனிதனாக, மாறமுடியும். ஆனால் அவரோ, ஏழையாக இருப்பதையே தெரிந்து கொண்டார். அவர் மரித்த போது, அவருக்கு ஒரு கல்லறைகூட இல்லாதிருந்தது. அதை அவருக்கென்று இரவலாக வாங்க வேண்டியதாயிருந்தது. இம்மானுவேல் இது ஒரு அடையாளமாயிருக்கும். தேவன் எவ்விதமாய் வருகிறார்-? ஏழ்மையாக-! தேவன் எவ்விதம் இடைப்படுகிறார்-? ஏழ்மை யோடும் கல்வி அறிவு இல்லாமல் இருப்பதும் என்றைக்குமான அடையாளமாயிருக்கும். 96. சிமியோன் தேவாலயத்திலே துணிகளால் சுற்றப்பட்டிருந்த அந்தச் சிறு குழந்தையைத் தன் கரங்களில், ஏந்தியிருந்த பொழுது, அன்னாள் என்னும் தீர்க்கதரிசி, "ஒரு அடையாளம்" என்றார். அன்னாள் இஸ்ரவேல் விழுகிறதற்கும், ஆனால் மீண்டுமாய் அது கூட்டி சேர்க்கப்படுகிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் ஒரு அடையாளமாயிருக்கும் என்றும், புறஜாதிக்கு ஒரு வெளிச்சமாயும் இருக்கும் என்றும் கூறினாள். 97. அது என்ன-? “தேவன் நம்மோடு இருத்தல்”. ஐசுவரியத்திலும், கர்வத்திலுமல்ல, ஆனால் ஏழ்மையில் இருத்தல். மாட்டுத் தொழுவத்திலே பிறந்த தேவன் நம்மோடு இருக்கிறார். அவர் எவ்வகையான காரியங்களைச் செய்தார்-? அவர் சொன்ன அவருடைய காரியங்களைக்கவனியுங்கள். அவர் என்ன சொன்னார் என்பதைக் கவனித்துப் பாருங்கள். 98. ஏனென்றால் தேவன் தாமே, "இவர் என்னுடைய நேச குமாரன், இவருக்குச் செவி கொடுங்கள்." நான் வாசமாயிருக்க பிரியமாயிருந்த, என்னுடைய குமாரன் இவரே-! இவருக்குச் செவி கொடுங்கள்" என்றார். அவர் "நான் உங்களுடன் கூட இருப்பேன், முடிவு வரைக்கும் உங்களோடு கூட இருப்பேன்," என்றார். 99. அவர் அவருடைய அப்போஸ்தலர்களை அனுப்பினார். அவர்களுடைய நாட்களிலே, தேவன் மனிதனோடு ஒன்றாக இருந்தபடியால், அவர்கள் உலகத்தையே அனல் மூட்டினார்கள். அவர்கள் ஜனங்களுக்கு, அந்த தேவனுடைய நாமமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே ஞானஸ்நானம் கொடுத்தார்கள். அவர் அடையாளங்கள் அற்புதங்கள், பரிசுத்தாவியின் வரங்கள் மூலமாகத் தம்மையே அவர்கள் மூலமாக வெளிப்படுத்தும் அளவிற்கு அவர்கள் அவருக்கு, அவ்வளவு நெருக்கமாக ஜீவித்தார்கள். தேவன் நம்மோடு இருக்கிறார். ஒரே ஒரு உண்மையான ஜீவிக்கிற தேவன் இருந்தார் என்று அவர்கள் பிரசிங்கித்தார்கள். 100. இரண்டு தேவர்கள், மூன்று அல்லது நான்கு தேவர்கள் என்பதன் பேரில் மனிதன் அனைத்து விதமான கோட்டைகளையும் கட்டினான். ஆனால் ஒரே ஒரு தேவன் மாத்திரமே அங்கு உண்டு. இந்தச் செய்தியானது கடைசி நாளில் புத்துயிர் அளிக்கப்பட வேண்டியதாயிருந்தது. 101. இப்பொழுது நீங்கள் அதன் பேரில் சிந்திப்பது நலமாயிருக்கும். உங்கள் இருதயங்களைத் திறவுங்கள். நான் என்ன கூற விழைகிறேன் என்பதை, தேவன் உங்களுக்கு வெளிப்படுத்தும்படி, அவரிடம் கேளுங்கள். அவர் வந்த போது, தீர்க்கதரிசி சொன்னவற்றை அவர், நிறைவேற்றினார். 102. மேலும், தேவனுடைய பின்மாரி, மழையிலே முன்மாரியும், பின்மாரியும் இரண்டுமே ஊற்றப்படக்கூடிய கடைசி நாட்களில் அவர் வரும் போது, சரியாக அவரைக் குறித்து என்ன தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டதோ, அந்தவிதமே அவர் வருகிறார். சாயங்கால நேரத்திலே, வெளிச்சம் உண்டாயிருக்கும். சம்பவித்திருக்க வேண்டியது என்ன-? "இம்மானுவேல்" அதே குமாரன், அதே வெளிச்சம், அந்த பெந்தெகோஸ்தே நாளிலே, மாம்சத்திற்குள் வாசமாய் இருக்கும்படியாக வந்த அதே தேவன் இந்த கடைசி நாட்களில் அந்த விதமே வருவார். ஏனென்றால், சாயங் காலத்திலே வெளிச்சம் உண்டாயிருக்கும். அது என்ன-? அது ஒரு அடையாளம்-! என்றென்றைக்குமான அடையாளமாயிருக்கும். தேவன் நம்மோடு இருத்தல். தேவன் நமக்குள்ளாக இருத்தல். தேவன் நம் மூலமாக இருப்பது. மனிதனும் தேவனும், ஒன்றாக மாறுவது. (கடந்த ஞாயிறு செய்தியின்படியாக) ஏனெனில் இயேசு அவருடைய தீர்மானத்தின்படியே, மரித்து, அவருடைய விலையேறப்பெற்ற ஜீவனைக் கொடுத்தார். ஒரு தீர்மானத்திற்காக அவர் அதைக் கொடுத்தார். அதன் மூலமாக, அநேக தேவகுமாரர்களைக் கொண்டு வரும்படியாக, இம்மானுவேல் நம்மோடு கூட இருக்கிறார். அது சாயங்கால வெளிச்சம் மக்களை அதிகமாக ஈர்க்கும். 103. தேவன் அடையாளத்தைக்கொடுத்த போது, அது “இது ஒரு அடையாளமாயிருக்கும். தேவன் மாம்சத்தில் வாசமாயிருப்பார். என்பதாக இருந்தது. அது ஜனங்களை ஈர்க்கும் என்று அவர் நினைத்தார். அது அவ்விதமே இருந்தது. அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ அத்தனை பேர்களும் தேவனுடைய குமாரர்களாகும்படி அதிகாரம் கொடுத்தார். 104. அதே வெளிச்சமானது சாயங்கால வெளிச்ச மக்களிடம், காண்பிக்கப்படும் பொழுது, அது அவர்களைக்கவர்ந்திழுக்க வேண்டியதாயிருக்கிறது. தேவனும் கிறிஸ்துவும் ஒன்றே!. பேதுரு “நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும், கிறிஸ்துவுமாக்கினார் என்று நீங்கள் நிச்சயமாய் அறியக்கடவீர்கள்," என்றான் .விரோதமாகப் பேசப்படும் அடையாளமாக, ஆனால் சாயங்கால வெளிச்சம் இங்கே இருக்கிறது. 105. பெந்தெகோஸ்தே செய்தியானது முதலாவது ஊற்றப்பட்ட சமயத்தில், ஒரு சுவிசேஷக ஊழியன் மறைந்த, டாக்டர் "ஹெய்வுட்" அவர் தன்னுடைய மகத்தான நாட்களில் இருந்த போது, ஒரு நாள் ஆவி அவரைத் தொட்டது. அவர் பிரசங்கியாக மட்டும் அல்லாமல், ஒரு புலவனாகவும் இருந்தார். அவர் தன்னுடைய பேனாவை எடுத்து, இவ்விதமாக எழுதினார். "சாயங்கால நேரத்திலே வெளிச்சம் உண்டாயிருக்கும். மகிமையின் பாதையை நீ நிச்சயம் கண்டடைவாய்-! தண்ணீரின் வழியிலே இன்றைக்கு வெளிச்சம் இருக்கிறது. விலையேறப் பெற்ற இயேசுவின் நாமத்தில் அடக்கம் பண்ணப்பட்டிருக்கிறது. வாலிபரோ, முதியோரே-!-! எல்லோரும் பாவத்திலிருந்து மனந்திரும்புங்கள். அப்பொழுது பரிசுத்தாவியானவர், நிச்சயமாய் உட்பிரவேசிப்பார். ஏனெனில், சாயங்கால வெளிச்சங்கள் வந்திருக்கிறது. தேவனும் கிறிஸ்துவும் ஒன்றே என்பது மெய்யானதாயிருக்கிறது.' 106. சாயங்கால வெளிச்சங்கள்... நாம் சாயங்கால வெளிச்சத்திலே, சாயங்கால அடையாளத்திலே, நடந்து கொண்டிருக்கிறோம் என்றால், அப்பொழுது, அது அதே வெளிச்சமாகும். அதே நித்திய அடையாளமாகவும் இருக்க வேண்டியதாயிருக்கிறது. அப்பொழுது அதே அடையாளங்கள், சாயங்கால வெளிச்சத்தைப்பின் தொடரும். வியூ-! உங்களால் அதைக் காண முடிகிறதா-? உங்களால் இதைப் புரிந்துகொள்ள முடிகிறதா-? அது தான் இந்த கிறிஸ்துமஸ் செய்தி. சாயங்கால வெளிச்சங்கள், மேசியாவின் அடையாளங்கள், அதனோடு சேர்ந்து வருகிறது. செய்தியோடு சேர்ந்து வருகிறது. சாயங்கால வெளிச்சங்கள் இங்கே இருக்கின்றன. 107. இது தூஷிக்கப்படுகிறது. அது உங்களையும் உங்கள், சகோதரர்களையும் திருப்பிப் போட்டுவிடும். யார் அவரைத் தள்ளிப்போட்டது-? அவருடைய சகோதரர்களே-!. அவர் அற்புதம் செய்வதைக் காண்பதற்கு அவர்கள் விருப்பம் கொண்டிருந்தனர். ஆனால் கல்வாரிக்கு வந்த போது அவர்கள் எல்லாம் எங்கே போய்விட்டார்கள்-? அந்த முக்கியமான நேரத்திற்கு வந்த போது, தேவன் அவருடைய சத்தியத்தையும் அவருடைய வேதாகமத்தையும் ரூபகாரப்படுத்தும் வேளை வந்த போது, அவர்கள் எங்கே-? அவர்கள் பின்னிட்டுச் சென்றார்கள். 108. "உங்களுக்கு அங்கே ஒரு அடையாளம் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த அடையாளங்கள் உங்களைப் பின் தொடரும். நான் என் பிதாவினிடத்திற்குப் போகிற படியால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப் பார்க்கிலும் அதிகமான கிரியைகளையும் செய்வான்." 109. "சாயங்கால நேரத்திலே மீண்டும் வெளிச்சம் உண்டாயிருக்கும்". முதல் சீர்திருத்தத்தினூடாக நாம் இருந்து வந்த இந்த இருண்ட நாட்கள்-! ஆனால், நாற்பது வருடங்களாகத்தான் தேவனும் கிறிஸ்துவும் ஒன்றே என்ற செய்தியை, அதாவது தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார் என்ற செய்தியை வெளிக் கொண்டு வர, மேகங்கள் விலகிச் செல்கின்றன. அவர் மனுஷனுடைய மாம்சத்தில் வாசம் செய்வதைத் தெரிந்து கொண்டார். ஆனால், இன்றைக்கு அவர்கள் அவரை ஒரு சிங்காசனத்தில் உட்கார்ந்திருப்பவர் போல சித்தரிக்கின்றனர். அவர்கள் அவரை ஒரு வரலாற்றுக்கு முற்பட்டவர் என்பது போன்ற ஒன்றாக ஆக்குகின்றனர், சிலர் மீண்டும் அவரை ஒரு தத்துவஞானியாக எடுத்துக்கொள்ள விரும்புகின்றனர். சிலர் அவரை ஒரு தீர்க்கதரிசியாக சித்தரிக்க விரும்புகின்றனர். ஆனால், சகோதரனே, அவர் உனக்குள்ளாக இருக்கும் தேவன் ஆவார் .மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன் அவர். எவ்வாறு-? 110. அவர் மாம்சத்தில் இருக்கும் தேவன் என்பதை அவர்கள் எப்படி கண்டு கொண்டனர்-? அவர், "நான் என் பிதாவின் கிரியைகளை செய்யாதிருந்தால், நான் தவறான ஒன்றை உங்களுக்குக் கூறியிருப்பேன். நான் என் பிதாவின் கிரியைகளை செய்வேனேயாகில், நீங்கள் அதை விசுவாசியுங்கள்" என்றார். 111. இப்பொழுதும் அதே காரியம் தான். கடைசி நாட்களில் மீண்டுமாய், அவர் யாராயிருக்கிறார், அவர் என்னவாயிருக்கிறார் எனும் செய்தியானது எழுச்சி பெற்றுள்ளது. உங்களுக்குள் வாசமாயிருக்கும் இம்மானுவேல், அவர் செய்த அதே கிரியைகளோடு, மிகச் சரியாக அவர் செய்த அதே கிரியைகளோடு, உங்கள் மூலமாகத் தம்மை வெளிப்படுத்துகிறார். இது சாயங்கால வெளிச்சமாயிருக்கிறது. இது குறித்து விரோதமாகப்பேசப்படுகிறது. இது ஒரு கடினமான பாதையாய் இருக்கிறது. 112. வாலிப ஐசுவரியவானாகிய அந்த அதிபதிக்கு அது ஏதோ ஒரு காரியமாயிருந்தது. இருப்பினும் இயேசுவினிடம் வரும்படிக்கு அவனுடைய இருதயம் பசியடைந்து, அவன், "ரபீ, நித்திய ஜீவனை சுதந்தரிக்க நான் என்ன செய்ய வேண்டும்-?" என்றான். அவர், "கற்பனைகளை கைக்கொள்" என்றார். அவனோ, "நான் சிறுவயது முதல் அதைச் செய்திருக்கிறேன்" என்றான். அவர், "அப்படியானால், நீ பூரண சற்குணனாயிருக்க விரும்புகிறாயா-?" என்றார். மேலும், "என்னைப் பின்பற்றி வா" என்றார். 113. ஆனால், அவனோ துக்கத்துடன் திரும்பிச் சென்று விட்டான். அது அவனுக்கு அதிகப்படியான கிரயமாய் இருந்தது. அவனுக்கு கொஞ்சம் பணம் கொடுக்கவோ, எங்காவது ஒரு பெரிய சபையைக் கட்டிக் கொடுத்து அதில் அவன் ஒரு அங்கத்தினனாக ஆக வேண்டும் என்பதாகவோ இருந்திருந்தால், அவன் எளிதில் அதைச் செய்திருப்பான். அதே போன்ற மாதிரியானது, இன்றைக்கு ஐசுவரிவான்கள் மத்தியில் இருப்பதை உங்களால் காண முடியவில்லையா-? அங்கே மற்றவர்களும் இருந்தனர். 114. ஐசுவரிவான்கள் மட்டுமல்ல, ஏழைகளும் இருந்தனர். அவர்களில் அநேகர் சேரி குடிசை போன்றவற்றில் இருந்து வந்திருந்தனர். புகழின் நிமித்தமாக அவர்கள் தள்ளி விட்டனர். ஏனெனில், அவர் புகழ் பெறாதவராயிருந்தார். அவர் இம்மானுவேலாயய் இருந்தார். அவர்களோ, "அது விமர்சனத்திற்குரியது. அது. அது பிசாசு. அது மனோவசியம். அது.. அது பெயல்செபூல்" என்றனர். அந்த நாளின் உபாத்தியாயர்கள், அவர்களது பெரிய சபைகள், "அபத்தமானது" என்றனர். 115. ஆனால் தேவன், “அது ஒரு நித்திய அடையாளம், மேம்பட்ட அடையாளம், எல்லா அடையாளங்களுக்கும் அடையாளம், அதாவது உலகத்தின் முடிவுபரியந்தம் தேவன் உங்களோடும், உங்களுக்குள்ளும் இருக்கிறார்" என்றார். அங்கே தான் உங்கள் மேம்பட்ட அடையாளம். அது எல்லா அடையாளங்களையும் மிஞ்சி விடுகிறதாயிருக்கிறது. அது, முதல் அடையாளமாயுள்ளது. அப்.19-ல், பரிசுத்த ஆவியைப் பெறுவதற்கு முன்னர், அந்த மக்கள் திரும்பி வந்து அந்த அடையாளத்தை அங்கீகரிக்க வேண்டியவர்களாயிருந்தனர். அப்.19:5. வேதத்தைப் பெற்றிருக்கிற எந்த விசுவாசியும், இயேசுவே கிறிஸ்து என்று நிரூபிக்கும் போதகரைப் பெற்றிருக்கிற எந்த விசுவாசியும், அதற்குள்ளாக வருவதற்கு முன்பாக, அந்த அடையாளத்தைக் காண்பதற்கு, அவர்கள் வந்து, மீண்டுமாய் ஞான ஸ்நானம் பெற வேண்டியவர்களாயிருந்தனர். அவர்கள் மேல் கைகளை வைத்த போது பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டனர். அது உண்மை . 116. ஆனால் சாயங்கால நேரத்திலே, வெளிச்சங்கள் இங்கே இருக்கின்றன. இது விமர்சிக்கப்பட்டது. இது பரிகசிக்கப்பட்டது. இதற்கு விரோதமாகப் பேசப்பட்டது. தீர்க்கதரிசி, "இது விரோதமாகப் பேசப்படும் ஒரு இடறுதற்கேதுவான கல்" என்றார். நிந்தையாகப் பேசப்பட்டது, பரிகசிக்கப்பட்டது. குறை கூறப்பட்டது. நமக்குள்ளாக இருக்கும் இம்மானுவேல், நமது மூலமாக அவரது சித்தத்தைச் செய்து கொண்டு இருக்கிறார். 117. ஓ, எனது யாத்ரீக சகோதரனே, எனது சகோதரியே, இன்றைக்கு அந்த அடையாளத்தை விசுவாசியுங்கள். உங்களது சொந்த இருதயத்தின் மாட்டுத் தொழுவத்திற்குள்ளே நோக்கிப்பார்த்து, உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ள முடிகிறதா எனப்பாருங்கள். மேய்ப்பர்கள் கண்ட அந்த அடையாளத்தை நோக்கிப் பாருங்கள். ஏழ்மையான, தேவையுள்ள, தள்ளப்பட்ட ஜனங்கள் மத்தியில் வாசம் செய்யும் மாம்சத்தில் உள்ள தேவன். உங்களால் அதை புரிந்து கொள்ள முடிகிறதா எனப் பாருங்கள். உங்கள் இருதயத்தில் இருக்கும் தேவனே, இங்கே இருக்கும் தேவன். நீங்கள் கவனித்து, அவர் செய்தது போன்று, இனிமையிலும், சாந்தத்திலும் அவர் தம்மை வெளிப்படுத்துகிறாரா எனப் பாருங்கள். 118. சில வருடங்களுக்கு முன்பு, ஒரு பெண் கல்லூரிப் படிப்பிற்காக வெளியே சென்றிருந்தாள். அங்கே அவளுக்கு கிடைக்கப்பெற்ற அநேக சக தோழிகளுடன் மிகவும் சாமார்த்தியமுள்ளவளானாள். அவள் தனது கிராமப்புறத்திலிருக்கும் தனது தாயினால் பாரம்பரியத்தில் போதிக்கப்பட்டவள். இரண்டு வருடங்கள் கழித்து ஒரு நாள் தன் தாயைப் பார்க்கச் செல்ல முடிவெடுத்தாள். அவள் இன்னின்ன ரயில் வண்டியில் வருவதாகவும், ரயில் நிலையத்தில் தன்னை சந்திக்கும்படியும் தந்தி அனுப்பியிருந்தாள். இருப்பினும், அவள் தன்னுடன் இன்னொரு சிறு சாமார்த்தியப் பெண்ணையும் அழைத்து வந்தாள். அவளும் ஒரு சாமார்த்தியப் பெண்ணாக தன்னை மாற்றிக் கொண்டாள். அவள் மேலும் தன்னுடன், நவ நாகரிக நுட்பங்களைக் கொண்ட, ஒரு பதின் வயது ஆனி என்று எல்லாரும் அழைக்கிற, அவ்வகையான மற்றொரு பெண்ணையும் அழைத்து வந்திருந்தாள். 119. அவள் நிலையத்தை அடைந்தவுடன், ரயிலிலிருந்து இறங்கும் வேளையில் அவள் நோக்கிப் பார்த்தாள். அங்கே அவளது தாயார், தனக்குரிய எல்லாவற்றோடும், தன் மகள் எப்படியிருப்பாள் என்பதைக் காண நின்று கொண்டிருந்தாள். அவளுடன் வந்திருந்த மற்றொரு பெண், அந்தத் தாயாரை, முகம் முழுவதும் வடுக்களால் நிறைந்ததும், கைகளெல்லாம் எரிந்து போனதாகவும் இருப்பதைக் கண்டாள். அவள் பார்ப்பதற்கு பயங்கரமாகவும், வயது சென்றவளாய் கோரமாய் இருந்தாள் அந்த சிறிய மேரியுடன் வந்திருந்த அந்தப்பெண் அவளிடம், "அந்த வயதான ஈனமாக தோற்றமளிப்பவள் யாராக இருக்கும் என வியக்கிறேன்" என்றாள். 120. அந்தப் பெண் தனது தாயாரைக் குறித்து வெட்கமடைந்து, "எனக்குத் தெரியாது. அவள் யாரென்று எனக்குத் தெரியாது" என்று கூறினாள். 121. அந்தத் தாய், தனது மகளைப் பார்த்த உடனே அவளிடம் ஓடி, தனது கரங்களை அவள் மீது அணைத்து, அவளை முத்தமிடத் தொடங்கினாள். 122. அவள் அவளைத் தள்ளி விட்டு, "நீ யார் என்று எனக்குத் தெரியாது. நீ தவறான நபரைப் பிடித்துக் கொண்டாய்” என்றாள். ஏனென்றால், மற்ற யாரோ ஒருவர் பார்த்து சிரித்து, கேலி செய்யக்கூடிய அளவில் உள்ள ஒருவரோடு தொடர்பு வைத்துக் கொள்ள அவளுக்கு விருப்பமில்லை. 123. அந்த நேரத்தில் அங்கே ஒரு மனிதர் இருந்தார். ரயில் வண்டியின் நடத்துனர், அவர் அங்கே நின்று கொண்டிருந்தார். அவர் அந்த வாலிபப் பெண்ணின் தோளைப் பற்றிக் கொண்டு, "உனக்கு அவமானம், பரிதாபமானவளே-! எனக்கு அந்த சம்பவம் நன்றாய் ஞாபகம் இருக்கிறது” என்றார். 124. என்ன சம்பவம் என்பதைக் கேட்க ஜனங்கள் கூடிவிட்டனர். அந்தப் பெண்ணை அப்படியே அவர் பிடித்துக் கொண்டு, "இந்த வாலிபப் பெண்.. .அப்பொழுது அவளுக்கு ஆறு மாதம்கூட இருக்காது. மாடியில் தொட்டிலில் இருந்தாள். அவளுடைய விலையேறப் பெற்ற தாய், இதுவரை நான் கண்டவர்களில் மிகவும் அழகானவள்" என்று கூற ஆரம்பித்தார். மேலும் அவர், "அவளது தாய், துணிகளை உலர வைத்துக் கொண்டிருந்த போது, வீடு தீப்பற்றிக் கொண்டது. அயலகத்தார் எல்லாரும் அலறிக் கொண்டு ஓடினர். அவர்கள் அதைக் கண்டனர். தாயார் அதை கவனிக்கவே இல்லை. அது வீட்டின் முன் தாழ்வாரப் பகுதியில் ஏற்பட்டது. நெருப்பு நன்கு பற்றி எரிந்து, அதின் ஜூவாலை காற்றில் சென்றன" என்றார். 125. அவர், அவர்களால் அந்த பித்துப் பிடித்த தாயை சமாளிக்க முடியவில்லை அவளுடைய குழந்தை மாடியிலிருந்தது. நெருப்பு தழலுக்கு உள்ளாக உன்னால் ஊடுருவிச் செல்ல முடியாது என எல்லாரும் சத்தமிட்டுக் கொண்டிருந்தனர். அவளோ தொங்கிக் கொண்டிருந்த ஈரமான அந்த போர்வையை எடுத்து தன்னை சுற்றிக் கொண்டு, நெருப்புக்குள்ளாக, அவளுக்கு உண்டாகக் கூடிய ஆபத்தை சற்றும் நினைத்துப் பார்க்காமல் மாடிக்குச் சென்றாள். பின்னர் அவள் அங்கே சென்ற போது, அதே போர்வையை சுற்றிக் கொண்டு திரும்ப முடியாது என்பதை அறிந்தாள். தனக்குப் பின்னால் வரவேண்டிய அந்த குழந்தையின் அழகைக் காப்பாற்றும் பொருட்டு, அந்தப் போர்வையால் குழந்தையைச் சுற்றி, தனது முகமும், கரங்களும் வெறுமனே திறந்த நிலையில் நெருப்பினூடாக ஓடினாள். நெருப்பு அவளது சரீரத்தில் உள்ள மாம்சத்தை எரித்துப் போட்டது. அவளது கன்னங்களை எலும்பு மட்டுமாக சுருங்கச் செய்து, அவளை அந்தக் கேடு ஆக்கியது. அவளது தலைமயிர் எல்லாம் எரிந்து விட்டன. அவளது விரல்களெல்லாம் எலும்பு தெரியும் அளவுக்கு எரிந்து விட்டன" என்றார். 126. மேலும் அவர், "நீ அழகாக இருக்கும்படியாக அவள் அவலட்சணமானாள். உன்னைக் காப்பாற்றும்படியாக அவள் தனது அழகையும், அவளிடமிருந்த எல்லாக்காரியங்களையும் துறந்தாள். நீயோ, இங்கு நின்று கொண்டு, அந்த விலையேறப் பெற்ற தாயைக் குறித்து வெட்கப்படுகிறாயா-?” என்று கேட்டார். 127. சகோதரனே, நான் தேவனைக் காணும் போது, அவரது சிங்காசனத்தையும், அவரது அழகையும், அவர் என்னவாயிருந்தாரோ அவை எல்லாவற்றையும் துறந்த பரலோகத்தின் தேவனைக் காணும்போது; ஒரு உரக்குவியலின் மேல் பிறக்க வேண்டியதும், கந்தைகளால் சுற்றப்பட வேண்டியதும், அவருடைய அடையாளங்காளாலும், அவருடைய அற்புதங்களாலும் பரிகசிக்கப்பட வேண்டியதும், ஒரு பிசாசு என்று அழைக்கப்பட வேண்டியதும்; (சகோ.பிரன்ஹாம் பீடத்தை மூன்று முறை தட்டுகிறார்-Ed) நான் அவரைக் குறித்து வெட்கமடைய வேண்டுமா-? இல்லை ஐயா. சிறப்புடன் கூடிய இந்த உலகமானது தாங்கள் விரும்புவதை செய்து கொள்ளட்டும். எனக்கோ, அவர் ஒரு மேம்பட்ட அடையாளமாக இருக்கிறார். எனக்குள்ளே இருக்கும் பரிசுத்த ஆவியானவர் கூச்சல் இடுகிறார். அது ஒருக்கால் என்னை இந்த உலகத்துக்கு வேடிக்கையான காரியங்களைச் செய்ய வைத்து, ஒரு பைத்தியக்கார மனிதனைப் போல ஆக்கலாம். ஆனால், எனக்காக இவ்வளவு காரியங்களைச் செய்த அவரை நான் மறுதலிக்க முடியாது. மரணத்தில் அவர் என்னுடைய இடத்தை எடுத்துக் கொண்டார். கல்வாரியில் அவர் என்னுடைய இடத்தை எடுத்துக் கொண்டார். இவைகள் எல்லாவற்றையும் அவர் செய்தார். அவர் என்னுடைய பாடுகளை ருசிக்கும்படியாகவும், என்னுடைய சோதனைகளினூடாகச் செல்லும்படி யாகவும், எனக்குள்ளே ஒரு சரியான மத்தியஸ்தராக இருப்பது எப்படி என்பதை அறிந்து கொள்ளும்படியாகவும், என்னை நித்திய ஜீவனுக்கு நடத்தும்படியாகவும், என்னை வழி நடத்தும் படியாகவும், முத்துக்களாலான வெள்ளை சிங்காசனத்திலிருந்து, பரலோகத்தில் இருந்து தன் உயர் நிலை துறந்து கீழ் நிலைக்கு மனமுவந்து வந்து ஒரு மனிதனாக ஆனார். அவருடைய தரித்திரத்தினாலே நான் ஐசுவரியவானானேன். அவருடைய மரணத்தின் மூலமாக எனக்கு ஜீவன் அளிக்கப்பட்டது, நித்திய ஜீவன் அளிக்கப்பட்டது. 128. அவரை மறுதலிக்காதீர்கள். அவரைக் குறித்து வெட்கப்படாதீர்கள். அவரைக் குறித்து வெட்கப்படாதீர்கள். ஆனால் அவரைத் தழுவி, 'ஆம், என் அன்பான கர்த்தாவே, பெந்தெகோஸ்தே நாளில் அவர்கள் செய்ததை எனக்குத் தாரும். எனக்கு பரிசுத்த ஆவியைத் தாரும் கர்த்தாவே. அதை என் இருதயத்தில் ஊற்றும் பதின் பருவத்தினர் என்ன சொல்கிறார்கள் என்பதைக் குறித்து எனக்குக் கவலை இல்லை. உலகம் என்ன சொல்கிறது என்பதைக் குறித்து எனக்குக் கவலை இல்லை. நான் அவர்களைப் பார்ப்பதில்லை. நான் உம்மை நோக்கிப் பார்க்கிறேன்" என்று கூறுங்கள். அது என்ன-? சபையைச் சேர்ந்து கொள்வதா-? இல்லை. அது அந்த மேம்பட்ட அடையாளம், இம்மானுவேல், தேவன் நம்மோடிருத்தல். 129. நாம் ஜெபம் செய்வோம். இன்று காலையில் இங்கு கூடி வந்திருக்கும் ஜனங்கள் மத்தியில், இந்த உலகத்தால் அசிங்கமாக்கப்பட்ட, வெறுக்கப்பட்ட அவரிடத்தில், என்னைப் பொறுத்தவரையில், நான் எனது ஜீவியத்தைக் குறித்து வெட்கப்படுகிறேன். நான் அவரைக் குறித்து வெட்கப்படவில்லை. எனது ஜீவியத்தைக் குறித்து நான் வெட்கப்படுகிறேன்" என்று கூற விரும்புகிற யாராவது இங்கே இருக்கிறீர்களா-? 130 துக்கம் நிறைந்தவரும், பாடு அனுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்" என்று தீர்க்கதரிசி கூறினார். "அவர் அசட்டை பண்ணப்பட்டு, புறக்கணிக்கப்பட்டார். நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப் பட்டரென்று எண்ணினோம். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்கு சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணம் ஆகிறோம்" 131. நீங்கள் அவரைக் குறித்து வெட்கப்படுவீர்களா-? அப்படியாய் இருந்தால், பீடத்தண்டை வந்து உங்கள் பாவத்திலிருந்து மனம்திரும்புங்கள். நீங்கள் அவரைக் குறித்து வெட்கப் படாமல் நீங்கள் உங்கள் ஜீவியத்தைக் குறித்து, அவருக்கென்று அர்ப்பணித்து உங்கள் ஜீவியத்தைக் குறித்து வெட்கப்படுவீர்களானால், அது அவ்வளவான மோசமான காரியமாய் இருக்கிறது. நீங்கள் அநேக முறை, உங்கள் அதிகாரிக்கு முன்பாக, தோழிக்கு முன்பாக, தோழனுக்கு முன்பாக, ஆண் நண்பன், பெண் நண்பனுக்கு முன்பாக வெட்கப்பட்டிருப்பீர்கள். உங்களுக்குள்ளாக வாசம்பண்ணும் இம்மானுவேலாகிய அவரைக் குறித்து வெட்கப்பட்டிருக்கிறீர்கள். உங்கள் கரங்களை உயர்த்தி, "தேவனே, வெட்கப்படு-கிறதற்காக என்னை மன்னியும்" என்று கூறுங்கள். 132. எங்கள் கர்த்தாவே, எங்கள் தேவனே, எங்களுடைய எல்லா குறைவுகளுக்காகவும், நாங்கள் எல்லோருமே சமயத்தில் குற்றமுள்ளவர்களாய் இருப்பதற்காகவும், நாங்கள் கோரும் எங்கள் மன்னிப்பை, மிகுந்த கிருபையாய் ஏற்றுக்கொள்ளும்படி உம்மைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். சத்தியத்திற்காக நிற்பதில் நாங்கள் குற்றவாளிகளாய் இருக்கிறோம். நாங்கள் குற்றவாளிகளாய் இருக்கிறோம். ஓ. சில பொல்லாத பெயர்களால் அவர்கள் எங்களை அழைக்கும் போது, அதாவது பரிசுத்த உருளை' என்பதைப் போன்ற அல்லது ஏதாவது பொல்லாத காரியங்களைச் சொல்லும் போது, அவைகள் எங்களிடம் இல்லை என்றாலும்கூட, சில சமயங்களில் நாங்கள் பேதுருவைப் போலப் பின்னிட்டு, எதிராளியின் அக்கினியினால் சூடேறிப் போகிறோம். எங்களை மன்னியும் கர்த்தாவே. 133. புதிய வருடம் எங்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நாங்கள் சரியாக இந்த மணி நேரத்திலிருந்தே துவங்கி, தேவனுடைய மேம்பட்ட அடையாளம் எங்கள் மத்தியில் இருப் பதையும், தேவன் எங்களோடு ஜீவிப்பதையும், எங்களோடே வாசமாயிருப்பதையும், கிரியை நடப்பிப்பதையும், அவர் செய்த வண்ணமே சரியாக செய்து கொண்டு இருப்பதையும் காண்போமாக. மேலும், சாயங்கால வெளிச்சங்கள் இங்கே இருக்கின்றன. எங்களுடைய குறைவுகளில் எங்களை மன்னியும். எங்கள் பாவங்களை மன்னியும். 134. கர்த்தாவே, உம்முடைய கிறிஸ்துமஸ் அன்பளிப்பை, அதாவது தேவகுமாரன் எங்கள் மண்ணாகிய மாம்சத்தில் வாசம் பண்ணவும், எங்களோடு ஜீவிக்கவும், அவருடைய சொந்த இரத்தத்தினாலே அவருடைய வழியைப் பரிசுத்தம் பண்ணவும், நித்திய ஜீவனின் நிச்சயத்தை எங்களுக்குக் கொடுப்பதுமான அன்பளிப்பை மிகுந்த கிருபையைப் பெற்றவர்களாய் ஏற்றுக் கொள்கிறோம். நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். கர்த்தாவே, இந்த மகத்தானதும் அற்புதமானதும் தேவனிடத்திலிருந்து வந்ததுமான அன்பளிப்புக்காக நான் நன்றி செலுத்துகிறேன். ஏனென்றால், அவை அனைத்தும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் சுற்றப்பட்ட வெகுமதியாக, ஒரு பரிசுத்தாவியின் வரமாயிருக்கிறது. நாங்கள் அதைப் பெற்றுக் கொள்ள சந்தோஷப்படுகிறோம். எங்களது சபையானது அந்த அடையாளத்திற்காக நிற்கிறது என்பதற்காக சந்தோஷப்படுகி றோம் ஏனென்றால், அந்த அடையாளமானது சபையின் போதனைக்காக நிற்கிறது. நாங்கள் அதற்காக நிற்கிறோம், அது எங்களுக்காக நிற்கிறது. உலக முழுவதும் கிறிஸ்தவர்கள் மத்தியில், ஜெபர்ஸன்வில், 8, பென் வீதியிலுள்ள ஒரு கூட்ட ஜனமானது, ஏழ்மையில், அறியாமையில் அறியப்பட்டுள்ளது. இம்மானுவேல், வனாந்திரத்திலிருந்து வந்த அக்கினி ஸ்தம்பம், கலிலேயாவின் இயேசு, பெந்தேகோஸ்தேயின் பரிசுத்தாவி, இம்மானுவேலின் அனைத்து அடையாளங்க ளோடும் சாயங்கால வெளிச்சத்திலே ரூபகாரப்படுத்தப்பட்டார். கர்த்தாவே, நாங்கள் அதற்காக மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். மற்றவர்களும் அதைக் கண்டு அதைப்பெற்றுக்கொள்ளட்டும். அவர் நிமித்தமாகவும், சபையின் நிமித்தமாக-வும் நாங்கள் அதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம், ஆமென். 135. ஒரு பாடகரின் குரல் எனக்கு இருந்திருக்க கூடாதா என வாஞ்சிக்கிறேன். இப்பொழுது ஒரு பாடகரின் குரல் எனக்கு இருக்குமெனில், எனக்குப் பிடித்தமான, எனது விலையேறப் பெற்ற நண்பர் வில்லியம் பூத் கிளிப்பர்ன் எழுதின பாடலை உங்களுக்காகப் பாட விரும்பியிருப்பேன். மகிமையிலிருந்து இறங்கின, என்றென்றும் ஜீவிக்கிற கதை, எனது தேவனும் இரட்சகரும் வந்தார். அவர் பெயர் இயேசு, தொழுவத்திலே பிறந்தார், அவருக்குச் சொந்தமானவர்-களுக்கு அவர் ஒரு அந்நியர், துக்கம், கண்ணீர், வேதனைகளை உடைய தேவன், நான் அவரை எவ்வளவாய் நேசிக்கிறேன், எவ்வளவாய் வணங்குகிறேன், எனது ஜீவனும், எனது பிரகாசமும், எனது எல்லாமுமானவர், மகத்தான சிருஷ்டிகர் என்னுடைய இரட்சகரானார். தேவனுடைய எல்லா பரிபூரணமும் அவருக்குள் வாசமாயிருக்கிறது. என்னே மனமிரக்கம் நமக்கு மீட்பைக் கொண்டு வந்தது, இரவின் உச்சத்தில், ஒருவிதமான நம்பிக்கையும் காட்சியில் வராத போது, (அப்பொழுது தான் கிளை மின்னல் வந்தது ) விலையேறப்பெற்ற மென்மையான ஒளியை அருகில் வைத்தார். ஒரு மாட்டுத் தொழுவத்தில் உரக்குவியலில் பிறக்கும்படி தாழ்த்தினார், என் ஆத்துமாவை இரட்சித்து ஜெயக்கத் தாழ்த்தினார், நான் அவரை எவ்வளவாய் நேசிக்கிறேன், எவ்வளவாய் வணங்குகிறேன், எனது சுவாசமும், எனது பிரகாசமும், எனது எல்லாமுமானவர். எனது மகத்தான சிருஷ்டிகர் இரட்சகரானார், தேவனுடைய எல்லா பரிபூரணமும் அவருக்குள் வாசமாயிருக்கிறது. 136 அப்படியானால், அவர் எனக்குள் இருக்கிறார், நான் அவருக்குள் இருக்கிறேன். "நான் என் பிதாவிலும், பிதா என்னிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்" இம்மானுவேலாகிய, தேவன் நம்மோடிருக்கிறார். 137 இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் ஜார்ஜ் ரைட்-ஐ, அவர் மரித்துக் கொண்டிருந்த நிலையில் கிடத்தப்பட்டு, நான்கு மருத்துவர்கள் அவரைக் கடந்து சென்ற நிலையில், அவரைக் கண்டவர், அதே இம்மானுவேலாய் இருந்தார். ஒரு கர்ப்பப் பையை இரவல் வாங்க வேண்டியவராயிருந்த, ஒரு கல்லறையை இரவல் வாங்க வேண்டியவராயிருந்த அதே இம்மானுவேலாய் இருந்தார். அவர் என்னுடைய கண்களை இரவல் வாங்கி என்னிடம், நீ போய் சகோ. ஜார்ஜ் ரைட்- இடம், கர்த்தர் உரைக்கிறதாவது, அவரைப் பார்த்து, சிரித்து, கேலி செய்யும் காரியங்களுக்கும், பிரசங்கிமார்களுக்குமான குழியை அவர் தோண்டுவார்,' என்று சொல்லச் சொன்னார். 138. அவர் அதே இம்மானுவேலாய் இருந்தார். அன்றொரு நாள் சிறு பிராணிகளைக் குறித்தும், மற்றொரு நாள் காடுகளைக் குறித்த சம்பவங்களிலும் இருந்தவர் அந்த ஒருவரே. இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் மார்ஜிமார்கனைக் குறித்தும் மற்றுமான அனைத்தையும் குறித்ததான காரியங்களிலும் இருந்தவர் அந்த ஒருவரே. சாயங்கால வெளிச்சங்கள் பிரகாசித்துக் கொண்டிருக்கையில், உங்கள் மூலமாக தம்மைத் தாமே உலகத்திற்கு அறிமுகப்படுத்த சிந்தையை இரவல் வாங்கினதும், சரீரத்தின் ஐம்புலன்களையும் இரவல் வாங்கினதும், அந்த ஒருவர் தான். நண்பனே, தேவன் இரக்கமுள்ளவராய் இருப்பாராக 139. உங்களுடைய அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்கிறேன். நாம் அதை முயற்சிப்போம். "ஓ, நான் எவ்வளவாய் அவரை நேசிக்கிறேன்," என்ற பாடலுக்கு ஸ்ருதியைக் கொடுங்கள். எத்தனை பேருக்கு அது தெரியும்-? "ஓ, நான் அவரை எவ்வளவாய் நேசிக்கிறேன், எவ்வளவாய் வணங்குகிறேன். எனது ஜீவனும், எனது பிரகாசமும், எனது எல்லாமுமானவர், எனது மகத்தான சிருஷ்டிகர் இரட்சகரானார். தேவனுடைய எல்லா பரிபூரணமும் அவருக்குள் வாசமாயிருக்கிறது, சகோ.பிரன்ஹாம் 'மகிமையிலிருந்து இறங்கின' என்ற பாடலை ரீங்காரம் செய்கிறார்-Ed எவ்வளவாய் வணங்குகிறேன், எனது சுவாசமும், எனது பிரகாசமும், எனது எல்லாமுமானவர், எனது மகத்தான சிருஷ்டிகர் இரட்சகரானார், தேவனுடைய எல்லா பரிபூரணமும் அவருக்குள் வாசமாயிருக்கிறது. 140. (சகோ. பிரன்ஹாம் மகிமையிலிருந்து இறங்கின என்ற பாடலை ரீங்காரம் செய்கிறார் -Ed] அவருடைய கிருபையைக் காட்டுவதற்கு இப்பொழுது அவருக்கான நேரமாய் இருக்கிறது. ஒரு தாய், லுகேமியா நோயால் பாதிக்கப்பட்ட, இரத்தப் புற்று நோய் உடைய ஒரு சிறு பிள்ளையைக் கொண்டு வருகிறாள். ஒரு குழந்தைக்கு அந்தப் பொல்லாப்பா-? தேவனே, என்னுடைய சத்தம் இங்கே இருக்கிறது; வார்த்தையைப் பேசும், மேலும், அது அவ்விதமே ஆகக்கடவது. ஏனென்றால், கர்த்தாவே, நீர், "இந்த மலையைப் பார்த்து 'பெயர்ந்து போ' என்று சொல்லி , சந்தேகப்படாமலிருந்தால், அது நடக்கும்" என்று சொல்லியிருக்கிறீர். தேவ குமாரனாகிய, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, 'லுகேமியா' என்றழைக்கப்படும் பிசாசை நான் கடிந்து கொள்கிறேன். இந்தப் பிள்ளையின் சரீரத்தில் உள்ள வியாதி நீங்கிவிடும். அது அதை விட்டுப் போயாக வேண்டும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அது அப்படியே ஆக்க்கடவது. எனது பிரகாசமும், எனது எல்லாமுமானவர். எனது மகத்தான சிருஷ்டிகர் இரட்சகரானார், தேவனுடைய எல்லா பரிபூரணமும் அவருக்குள் வாசமாயிருக்கிறது, 141. நான் எப்படியாய் அவரை நேசிக்கிறேன். நான் அதை அப்படியே விட்டுவிட முடியவில்லையே. நான் யாக்கோபைப் போல பற்றிக் கொண்டிருக்க விரும்புகிறேன். எவ்வளவாய் வணங்குகிறேன், எனது சுவாசமும், எனது பிரகாசமும், எனது எல்லாமுமானவர், "இது ஒரு அடையாளமாயிருக்கும்" எனது மகத்தான சிருஷ்டிகர் இரட்சகரானார், தேவனுடைய எல்லா பரிபூரணமும் அவருக்குள் வாசமாயிருக்கிறது. 142. அவர் அற்புதமானவராக இல்லையா-? அவரைத் தொழுது கொண்டிருப்பதாக நீங்கள் உணரவில்லையா-? ஆவியில் அவரைத் தொழுதுகொள்ளுங்கள். (சகோ. பிரன்ஹாம் 'மகிமையிலிருந்து இறங்கின' என்ற பாடலை ரீங்காரம் செய்கிறார் - Ed ). உங்களை அப்படியே சற்று மறந்து விடுங்கள். வெட்கப்படாதீர்கள். பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கிறார். அது பரிசுத்த ஆவி. உங்களுடைய சொந்த பாணியில் சாந்தமாய் ஆராதியுங்கள். எனது மகத்தான சிருஷ்டிகர் இரட்சகரானார். தேவனுடைய எல்லா பரிபூரணமும் அவருக்குள் வாசமாயிருக்கிறது. அங்கே தான் காரியம் என்னே மனமிரக்கம் நமக்கு மீட்பைக் கொண்டு வந்தது, ("அது ஒரு அடையாளமாயிருக்கும்") இரவின் உச்சத்தில், ஒருவிதமான நம்பிக்கையும் காட்சியில் வராதபோது, விலையேறப்பெற்ற மென்மையான ஒளியை அருகில் வைத்தார், அவர் செய்ததை நினைத்துப் பாருங்கள்) என் ஆத்துமாவை இரட்சித்து ஜெயிக்க தாழ்த்தினார், 143. நாம் பாடும்போது, நமது கரங்களை உயர்த்துவோம். "ஓ, நான் அவரை எவ்வளவாய் நேசிக்கிறேன் எவ்வளவாய்வணங்குகிறேன், எனது சுவாசமும், எனது பிரகாசமும், எனது எல்லாமுமானவர், எனது மகத்தான சிருஷ்டிகர் இரட்சகரானார், தேவனுடைய எல்லா பரிபூரணமும் அவருக்குள் வாசமாயிருக்கிறது. 144. கர்த்தாவே, உமது ஆவியின் நிறைவையும், ஐசுவரியத்தையும், அவர் வரும் நாளில் அவரை சந்திக்கும் வரைக்கும், நாங்கள் புரிந்துகொள்ள இயலாது. ஒருவேளை நாங்கள் மண்ணில் உறங்கிக் கொண்டிருக்கலாம். ஒரு வேளை, நான் எனது மூல மண்ணிற்குத் திரும்பிப் போகலாம், ஆனால் அது என்னை ஒரு துளி கூட கவலைப்படுத்தாது. "அவர் என்னை அழைப்பார். நான் அவருக்கு மறுஉத்தரவு கொடுப்பேன் என்பதை அறிந்திருக்கிறேன். அப்பொழுது, அவர் இருக்கிற வண்ணமாக நான் அவரைக் காண்பேன். அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக் கொள்ளத்தக்க செயலின்படியே, இந்த அழிவிற்குரிய சரீரத்தை தம்முடைய மகிமையான சரீரத்துக்கு ஒப்பாக மறுரூபப் படுத்துவார்.'' 145. என் இருதயத்திலுள்ள கிறிஸ்துவின் கிறிஸ்துமஸ் வெகுமதிக்காக, அதாவது, இது அதே கிறிஸ்துவாக இருக்கிறார் என்பதை அறிந்தமைக்காக நான் எப்பொழுதும் உமக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன், ஏனெனில் அவர் இன்னும் அதே காரியத்தைச் செய்கிறார். ஆரம்பத்தில் அவருடைய ஊழியர்களுக்கு அவர் செய்தது போன்று நான் உணரவும், கிரியை செயும்படியாகவும் செய்தார். 146. ஒரு உலகளாவிய, வெற்றி சிறந்த, ஏற்கெனவே முன்குறிக்கப்பட்ட, அழைக்கப் பட்டதும், முத்தரிக்கப்பட்டதுமான, அந்த சரீரத்திற்கென்று நியமிக்கப்பட்டதுமான சபைக்காக நான் நன்றி உள்ளவனாயிருக்கிறேன். நான் அவைகளை ஆசியா, ஆப்பிரிக்கா, ரோமாபுரி, இண்டியானா, மாகாணங்கள் தோறும், எல்லாவிடங்களிலும் காண்கிறேன். உலகத்தைச் சுற்றிலும் எவ்விடங்களிலும், நீர் மாம்சத்தில் வந்திருக்கிறீர் என்பதை அறிந்திருக்கிற வெற்றி சிறந்த சபையைக் காண்கிறேன். உம்முடைய வேதாகமத்தில் நீர், "இதை அறிக்கை செய்யாத எந்த ஆவியும் தவறான ஆவியாயும் அந்திக் கிறிஸ்துவாயும் இருக்கிறது. இதே காரியத்தை அதாவது கிறிஸ்து நமது மாம்சத்தில் வந்திருக்கிறார் என்பதை சாட்சி பகராத ஒவ்வொரு ஆவியும் அந்திக்கிறிஸ்துவின் ஆவியாயும் இருக்கிறது" என்றீர். 147. பிதாவே, தேவனே அங்கே உள்ள ஒருவகை உணர்ச்சி மிகுந்தவர்களை அசைக்க உதவி செய்யும். அங்கே தூரத்திலே நான் அவர்களைக் காண்கிறேன். தூரத்திலே உள்ள இந்தியாவிலே, தாஜ்மஹாலின் வாயிலிலே இருக்கும் குஷ்டரோகிகளையும், கால்களே இல்லாமல் ஊர்ந்து செல்லும் ஏழ்மையானவர்களையும் காண முடிகிறது ஆப்பிரிக்காவில் உள்ள அந்த ஏழை கறுப்பினப் பையன்கள் தங்கள் கரங்களை ஏந்துகிறதைப் பாரும். ஓ, தேவனே-! என்னை அனுப்பும் கர்த்தாவே தேவதூதன் ஒரு நெருப்புத் தழலைக் கொண்டு வந்து, என் ஆத்துமாவை அனலாக்கி, தேவனுடைய ஒரு அக்கினிப்பொறியாக நான் போய், அந்தகார இருளாகிய அக்கினிக்குள் இருப்பவர்களை பறித்தெடுக்கும்படியாக, எல்லாக் கசடுகளையும், மந்தத்தனத்தையும் வெளியே எடுப்பாராக. 148. கர்த்தாவே, எனது சிறிய சபையை ஆசீர்வதியும். ஓ-! இங்கே சிறிய தொடர்ச்சியான மனமாற்றங்களைப் பெறும் விலையேறப் பெற்ற மக்களை என்னால் காண முடிகிறது வழியில் கார்களை ஓட்டிச் செல்லும் மக்கள் இவர்களைப் பார்த்து சிரிக்கின்றனர், ஏனெனில், இவர்கள் தங்கள் கரங்களை உயர்த்தினவாறு தேவனை ஸ்தோத்தரிக்கின் றனர். ஆனால் ஒரு நாளில் இயேசு வருவார், அப்பொழுது எல்லாக் காரியங்களும் சரியாக ஆக்கப்படும். கர்த்தாவே, நாங்கள் வெட்கப்பட மாட்டோம். நாங்கள் பண்டைய பவுலுடன் இணைந்து கொண்டு, "இயேசு கிறிஸ்துவின் சுவிஷேசத்தைக் குறித்து நான் வெட்கப்படேன். விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு, நித்திய ஜீவன் உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது” என்று கூறுவோம். பிதாவே, நாங்கள் அவ்வழியே ஜீவிக்க உதவி செய்யும். இப்பொழுது ஆவிக்குள்ளாக உன்னதங்களில் உம்மை ஆராதித்துக்கொண்டிருக்கிறோம். இக்காலையில் உம்முடைய சந்திப்பிற்காக நன்றி செலுத்துகிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென். 149. மீண்டும் ஒருமுறை பாடுவீர்களா. ஓ, நான் அவரை எவ்வளவாய் நேசிக்கிறேன், எவ்வளவாய் அவரை.. இயேசு கிறிஸ்துவை...-? இயேசுவின் நாமத்தில்.. எனது மகத்தான சிருஷ்டிகர் இரட்சகரானார், தேவனுடைய எல்லா பரிபூரணமும் அவருக்குள் வாசமாயிருக்கிறது. 150. இன்னும் அவர் நமக்கு அதிகமாக வேண்டும். இல்லையா டோ அவர்களே-? (டெலோர்ஸ், "ஆம்" என்கிறார்). அது எனது சகோதரி, மாம்சப் பிரகார சகோதரி. ஓ. நான் எவ்வளவாய்... எனது மருமகள், தேவனுடைய காரியங்களை அவள் அதிகமாய் வாஞ்சிக்கிறாள். தேவனை அதிகம் தேடுகிற சகோ.கிரிம்ஸ்லே வருகிறார். சகோ. உட் வருகிறார். சகோ. காலின்ஸ், ஒரு மெதொடிஸ்ட் போதகர்; அவர் மனைவி மற்றும் மற்றவர்களும். இது பரிசுத்த ஆவியின் அழைப்பின் கிரியையாயிருக்கிறது. ஓ, நான் எவ்வளவாய்... இப்போழுது உங்கள் சொந்த பாணியில் வெளிப்படுத்துங்கள் ஓ, நான் அவரை எவ்வளவாய் நேசிக்கிறேன், எவ்வளவாய் வணங்குகிறேன் , எனது சுவாசமும், எனது பிரகாசமும், எனது எல்லாமுமானவர். எனது மகத்தான சிருஷ்டிகர் இரட்சகரானார். தேவனுடைய எல்லா பரிபூரணமும் அவருக்குள் வாசமாயிருக்கிறது. 151. கர்த்தாவே, கர்த்தாவே, இதோ அவர்கள், உமது மேய்ச்சலின் ஆடுகள் இங்கே இருக்கிறார்கள். உம்முடைய ஆவியினாலே அவர்களைப்போஷியும் கர்த்தாவே. அவர்கள் தம்மையே உமக்கென்று கொடுக்கிறார்கள் கர்த்தாவே. அவர்கள் தங்கள் ஜீவியங்களை உமக்கென்று அர்ப்பணிக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவின் சுவிஷேசத்தைக் குறித்து அவர்கள் வெட்கப்படாதபடியினால் அவர்கள் இங்கே நிற்கிறார்கள். மகத்தான அக்கினி ஸ்தம்பம், கிறிஸ்து, பரிசுத்த ஆவியாகிய நீர் இங்கே இருக்கிறீர் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். எவ்வளவாய் வணங்குகிறேன், எனது சுவாசமும், எனது பிரகாசமும், எனது எல்லாமுமானவர், எனது மகத்தான சிருஷ்டிகர் இரட்சகரானார். தேவனுடைய எல்லா பரிபூரணமும் அவருக்குள் வாசமாயிருக்கிறது. 152. [சகோ. பிரன்ஹாம் மகிமையிலிருந்து இறங்கின என்ற பாடலை ரீங்காரம் செய்கிறார் - Ed). இப்பொழுது உங்கள் சொந்த வார்த்தைகளில் பேசுங்கள். உங்களை இங்கே கொண்டு வந்தவர் அந்த பரிசுத்த ஆவியானவரே. நீங்கள் அவரை நேசிக்கிறீர்கள் என்று அவரிடம் கூறுங்கள். பெந்தெகோஸ்தே நாளன்று அவர்களை எழுப்பின அதே பரிசுத்தாவி ஆனவரால் நீங்கள் இங்கே நின்று கொண்டு, கதறிக் கொண்டும், அழுது கொண்டும், களி கூர்ந்து கொண்டுமிருக்கிறீர்கள். எனது மகத்தான சிருஷ்டிகர் இரட்சகரானார். தேவனுடைய எல்லா பரிபூரணமும் அவருக்குள் வாசமாயிருக்கிறது. தயக்கமின்றி மாம்சமும் இரத்தமும் அவரது வஸ்துவானது (அவளுக்குள் ஒரு குழந்தையாக) மனித ரூபத்தைத் தரித்தார் மறைக்கப்பட்ட திட்டத்தை வெளிப்படுத்தினார். ஓ, மகிமையான இரகசியம் கல்வாரியின் பலி அந்த மகத்தான இருக்கிறேன்' நீர் தான் என்பதை நான் இப்பொழுது அறிவேன், ஓ. தேவனே-! எவ்வளவாய் வணங்குகிறேன், எனது சுவாசமும், எனது பிரகாசமும், எனது எல்லாமுமானவர், எனது மகத்தான சிருஷ்டிகர் இரட்சகரானார், தேவனுடைய எல்லா பரிபூரணமும் அவருக்குள் வாசமாயிருக்கிறது. 153. எல்லாக் காரியத்திற்கும் அப்பாற்பட்டதாக என் இருதயத்தைப் பற்றிப் பிடித்திருக்கும் அன்பு, பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தின் இனிமை, ஓ, அந்த அன்பு என்னைப் போக விடாது. பீடத்தைச் சுற்றி நின்று கொண்டு, பணிந்து கொண்டு, தொழுவத்தின் முன்னணையிலே வானசாஸ்திரிகள் பார்த்துக் கொண்டிருந்த அதே காரியத்தை அவருடைய சபையானது பார்த்துக்கொண்டிருக்கும் வேளையிலே, தேவன் மாம்சமானார். எனது மகத்தான சிருஷ்டிகர் இரட்சகரானார், தேவனுடைய எல்லா பரிபூரணமும் அவருக்குள் வாசமாயிருக்கிறது. 154. உங்களது ஜீவியத்தில் ஏதாவது தவறான காரியம் இருக்குமெனில், இப்பொழுது பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தில் அதை அமைதியாக அறிக்கை செய்யுங்கள். அவர் தேவனே என்று நீங்கள் அறிக்கையிடுகின்ற உங்கள் அறிக்கையின் மேல் வருகின்ற விமர்சனத்தைத் தாங்கத்தக்கதாக அங்கே ஒரு மாட்டுத்தொழுவம் இருக்கிறதா என்று உங்கள் இருதயத்திற்குள் நோக்கிப் பாருங்கள். தேவனுடைய எல்லா பரிபூரணமும் அவருக்குள் வாசமாயிருக்கிறது. 155. உங்களுடைய தலைகள் வணங்கியிருக்கும் வேளையில், இப்பொழுதே நீங்கள் ஒரு ஜெபத்தை ஏறெடுங்கள். இது பரிசுத்த ஆவியாயிருக்கிறது. தேவனுடைய ஆவியின் மென்மையையும், சாந்தத்தையும், இனிமையையும், நீடித்த ஜீவனையும் உங்களால் உணர முடியவில்லையா-? 156. "அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அறிவானாலும் தோற்றுப்போம், ஆனால் அன்பு வருமெனில், அது என்றென்றைக்குமாய் இருக்கும்." "அன்பு நீடிய சாந்தமுள்ளது; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, அயோக்கியமானதைச் செய்யாது. ஆனால், அது நம்மைத் தாழ்மைப்படுத்துகிறது, இனிமைப்படுத்துகிறது, உங்கள் ஆத்துமாவில் இனிமையை வைக்கிறது." 157. இப்பொழுது நாம் ஜெபிப்போம், ஒவ்வொருவரும் உங்கள் சொந்த பாணியில், அவர் செய்தவற்றிற்காக தேவனுக்கு நன்றி செலுத்துங்கள். 158. ஓ-! கர்த்தாவே, ஸ்ருதிக் கட்டையிலிருந்து வெளி வரும் இசையானது, ஒரு விளங்காத சத்தத்தைப் போல இல்லாமல், எங்கள் தேவன் யார் என்று சரியாக வார்த்தையானது வெளிப்படுத்தின விதத்திலேயே எங்களுக்கு உணர்த்தும் வகையில், இந்தப் பாடலின் இனிமை அமைந்துள்ளது. இப்பொழுது இசையானது அதை வெளிப்படுத்துகிறது. இப்பொழுது, கர்த்தாவே எங்கள் இருதயமும் கூட அதை, உம்மை நோக்கின எங்கள் அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது. நாங்கள் முன்னாக வருகிறோம். அவர்கள் தங்கள் காலூன்றி நிற்கிறார்கள். அவர்கள் உம்மை நேசிக்கிறார்கள். கர்த்தாவே, நாங்கள் உமது செம்மறியாடுகளாய், உமது மேய்ச்சலின் ஆடுகளாய் ஒன்றுகூடி நிற்கிறோம். நாங்கள் இந்த ஆகாரத்தை விரும்புகிறோம், இது எங்கள் ஆத்துமாவுக்கு நன்மையானதாய் இருக்கிறது. மேலும், தேவன் எங்களோடு ஜீவிக்கிறார் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். தேவன் தம்மை கிறிஸ்துவுக்குள் ஊற்றியிருக்கிறார் என்றும் கிறிஸ்து தம்மை சபைக்குள் ஊற்றியிருக்கிறார் என்றும் அறிந்திருக்கிறோம். 159. எல்லா விதமான மார்க்கங்களுக்கும், எல்லாவிதமான ஸ்தாபனங்களுக்கும், கட்டங்களுக்கும், எல்லாவிதமான நம்பிக்கைகளுக்கும் மத்தியில் இன்றைக்கு நாங்கள் நிற்கிறோம், ஆனால் இன்னும், தேவன் வெளிப்பட்டார் என்று வார்த்தையானது தனக்காக பேசிக்கொண்டிருக்கிறது. தேவன் அவருடைய ஜனங்களின் மாம்சத்தில் இன்னுமாக வெளிப்பட்டிருக்கிறார் என்கிற மேம்பட்ட அடையாளமானது அதே அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்து, ஒரு மேகஸ்தம்பமாகக் காட்சியளித்து, நமது மத்தியில் வாசம் செய்து, நமது இருதயங்களை வகையறுத்து, வரவிருக்கும் காரியங்களை முன்னறிவித்து, நமது வியாதிகளை சுகமாக்கி, நம்மை நாமே அடக்கிக் கொள்ள முடியாத அளவிற்கு, அவ்வளவாக நம்மைப் பரலோகத்துடன் பிணைக்கப்பட்டவர்களாக ஆக்கிக் கொண்டிருக் கிறது. உலகத்தில் பிள்ளைகளுக்கு, நாம் விசித்திரமான காரியங்களைச் செய்கிறோம். எப்படியாக அவர்கள் நின்று கொண்டு, நகைத்து, சரியாக பெந்தெகோஸ்தே நாளில் செய்தது போல "இவர்கள் அனைவரும் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்களென்று” அவர்கள் கூறினது போன்று, நம்மையும் பைத்தியக்காரர்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால், நான் அவரை எவ்வளவாய் நேசிக்கிறேன், எவ்வளவாய் வணங்குகிறேன், எனது சுவாசமும், எனது பிரகாசமும், எனது எல்லாமுமானவர், எனது மகத்தான சிருஷ்டிகர் இரட்சகரானார், தேவனுடைய எல்லா பரிபூரணமும் அவருக்குள் வாசமாயிருக்கிறது. 160. தேவனில் உள்ள உங்கள் விசுவாசத்தையும், தேவனுக்கு உங்கள் பொருத்தனை களையும், தேவனுக்கு உங்கள் நேர்மையையும் உண்மையையும் உறுதிப்படுத்தும் வண்ணமாக முழு சபையும் உங்கள் கரங்களை உயர்த்துவீர்களா-? 161. கர்த்தாவே, தேவன் எங்கள் மாம்சத்தில் இன்னுமாக வெளிப்பட்டிருக்கிறார் என்பதை அறிந்தவர்களாக, உமது பிரசன்னத்தின் வெளிப்படுதலின் இந்த ஆசீர்வாதங்களை இப்பொழுது பெற்றவர்களாய், எங்களை உமக்கென்று அர்ப்பணிக்கிறோம். அவர் நம்மைப் போல மண்ணானார், நமது இனமானார். மனிதன் அவரில் ஜீவிக்கும்படியாக, அவர் தம்மையே தேவனிலிருந்து கடந்து வரப்பண்ணி, மனிதனானார். இக்காலையிலே, எங்கள் ஆவியிலே உம்மை உணர்ந்தோம். உமது கிரியைகளையும், உமது ரூபகாரப்படுதலையும் காண்கிறோம். நாங்கள் உம்மை நேசிக்கிறோம். உம்மை கனப்படுத்தவும், உம்மை நேசிக்கவும், உம்மை பிரியப்படுத்த எங்களுக்குத் தெரிந்த யாவற்றையும் செய்யவும், உமது மகத்தான பரிசுத்த நாமத்திற்கு நிந்தையைக் கொண்டு வராமல், ஒரு ஆசீர்வாதமாய் இருக்கும்படியான ஒரு கிறிஸ்தவ வாழ்க்கையை ஜீவிப்பதற்கு, எங்களையே உமக்கென்று திரும்பவும் அர்ப்பணிக்கிறோம். கர்த்தாவே, உம்முடைய பிள்ளைகள் என்ற முறையில் நாங்கள் இதைச் செய்கிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென். 162. நீங்கள் உட்காருவதற்கு முன்பாக உங்களை ஒன்று நான் கேட்க விரும்புகிறேன். இப்படிப்பட்ட இனிமையான உணர்வை நீங்கள் எப்பொழுதாவது பெற்றதுண்டா-? பரிசுத்த ஆவியின் இனிமை-! யாரும் ஒரு வார்த்தையும் சொல்லாமலே, தாமாக எழுந்து முன் வந்து கொண்டிருந்தீர்கள். என்னே தேவனுடைய மகிமை-! பாருங்கள். 163. கடந்த இரண்டு நாட்களாக நான் இதன் பேரில் ஜெபித்துக் கொண்டும், தியானித்துக் கொண்டும் இருந்தேன். அதற்கும் மேலாக, ஆம், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல். 164. எப்படியாக அந்த மேம்பட்ட அடையாளம், எப்படியாக தேவன், "நான் அவர்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பேன். நான் அவர்களது மாம்சத்தில் இருப்பேன். நான் அவர்களைப் போல இருப்பேன்; அவர்கள் என்னைப் போல இருப்பார்கள்" என்றார். தூதர்கள் அதனைப் பார்த்தார்கள் என்று கூறினார். அல்லது ... தூதர்கள் மேய்ப்பர்களிடம், "மாட்டுத் தொழுவத்திற்குள் பாருங்கள். நாங்கள் கூற விழைவது உங்களுக்குப் புரியும்" என்றனர். அந்த அடையாளம் தூதர்களுக்கு மாத்திரம் அல்ல. அந்த அடையாளம் மேய்ப்பர்களுக்கு மாத்திரம் அல்ல. அது உலகத்திற்கு, தேவன் மாம்சத்தில் வாசம் செய்கிறார் என்பதைக் கண்டு விசுவாசிக்கத்தக்கதான அடையாளமாயிருக்கிறது. 165. அந்த மாம்சத்தைப் பலியிடுவதன் மூலம், நமது மாம்சத்தைப் பரிசுத்தம் பண்ணினார். அதன் மூலம் அவர் நமக்குள்ளாக வாசம் செய்ய முடியும். தேவன் உங்களுக்குள் இருக்கிறார். கிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறார். "இதோ, உலகத்தின் முடிவு பரியந்தம் நான் உங்களுடன் எப்பொழுதும் இருப்பேன்" இதை மறந்து விடாதீர்கள். இதை உங்கள் இருதயங்களில் வைத்துக் கொள்ளுங்கள். 166. நான் சில மகத்தான கிறிஸ்துமஸ் பரிசுகளைப் பெற்றுக் கொண்டேன். ஒரு சினிமாப் புகைப்படக் கருவி, துப்பாக்கி, இன்னும் மற்ற காரியங்கள். ஓ, ஜனங்கள் என்னை நேசித்து எனக்கு அவற்றை அளிக்கிறார்கள். எவ்வளாவாய் அதை நான் மெச்சுகிறேன். 167. ஆனால், ஓ, இந்த நித்திய ஜீவன், கிறிஸ்து நமக்குள் ஜீவிக்கிறார் என்கிற, அவருடைய பரிபூரணம் நமக்குள்ளாக வாசமாயிருக்கிறது என்கிற ஆசீர்வதிக்கப்பட்ட நிச்சயமானது நம்மை எழுப்பி, வித்தியாசமாக செயல்பட வைக்கிறது. ஏனென்றால், நீங்கள் அதைச் செய்யும் போது, நீங்கள் இந்த உலகத்திற்குத் தப்பியோடுகிறவர்களாக மாறிவிடுவீர்கள். இந்த உலகத்திற்குப் பரதேசியாக ஆகிவிடுவீர்கள். நீங்கள் உங்களையே இந்த உலகத்தின் காரியங்களுக்கு மரித்தவர்களாகவும், ஒரு புதிய வாழ்க்கைக்கு ஜீவிக்கிறவர்களாகவும் எண்ணிக் கொள்வீர்கள். இப்பொழுது நீங்கள் இந்த உலகத்திற்கு மாற்றுதேசத்தானாய் இருக்கிறீர்கள். நீங்கள் இந்த உலகத்திற்கு ஒரு மாற்று தேசத்தான் ஏனென்றால், "அங்கே ஒரு நகரம் இருக்கிறது, அதைக் கட்டினவரும், உருவாக்கினவரும் தேவனே" என்பதை உங்கள் நடக்கைகளினால் தெளிவாக வெளிக்காட்டியிருக்கிறீர்கள் புரிகிறதா-? நாம் இந்த உலகத்தின் காரியங்களுக்கு இனி மேல் அக்கறை கொள்ளாதவர்களாய், தேவன் தாமே கட்டி உருவாக்கின அந்த நகரத்தை எதிர் நோக்கிக் கொண்டிருக்கிற, பரலோகப் பிணைப்புள்ள ஜனங்களாயிருக்கிறோம். நாம் ஆபிரகாமின் வித்தாயிருக்கிறோம் ஏனென்றால், கர்த்தராகிய இயேசுவின் கிறிஸ்துவின் மேல் விசுவாசம் கொண்டவர்களாய், இந்த உலகத்தின் காரியங்களுக்கு மரித்து, அவருடைய உயிர்த்தெழுதலின் சாயலிலே எழுப்பப்பட்டு, ஆபிரகாம் செய்தவற்றில் நடந்து, வரக்கூடிய நகரத்தைத் தேடி, தேவனுடைய வார்த்தையை எடுத்துக் கொண்டு, மற்றெல்லாக் காரியங்களையும் முரணானது என அழைத்துக் கொண்டு, ஆபிரகாம் செய்தது போல செய்தியைக் கொண்டு வரும் தேவனுடைய செய்தியாளர்களை தூதர்களை எங்கள் வீடுகளில் மகிழ்விக்கிறவர்களாகவும் இருக்கிறோம். ஓ, என்னே ஒரு தருணம், இனி இந்த உலகத்தின் காரியங்களே வேண்டாம் என்பது. அவரே எங்களுக்கு வேண்டும், அவர் மாத்திரமே. அவரே எங்கள் இரட்சகர். 168. இந்தக் கட்டிடத்திலிருந்து இக்காலை நீங்கள் புறப்பட்டுச் செல்கையில், அவரை உங்களோடு அழைத்துச் செல்லுங்கள். ஒரு போதும் விட்டு விடாதிருங்கள். உங்கள் ஜீவிய கால முழுவதும் உங்கள் ஆத்துமாவிலே இனிமையுள்ளவர்களாய் இருங்கள். நீங்கள் உங்கள் இருக்கைகளுக்குச் செல்கையில் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. பிள்ளைகளுக்கான வெகுமதிகள் இங்கே இருக்கின்றன. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 169. ஜெபிப்பதற்காக வருகிறீர்களா-? (ஒரு சகோதரி பதிலளித்து "ஆம்" என்கிறார்கள் -ஆசி) அவர்கள் வருவதற்கு உதவி செய்யுங்கள் சகோதரியே. ஜெபிப்போம். தேவனாகிய கர்த்தாவே, இந்த சகோதரன் மேல் இரக்கமாயிரும். குடிபோதையின் ஆவியை எடுத்துப் போடும். தேவனுடைய புதிய திராட்சை ரசத்தை அவர் பருகட்டும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென். 170. இது உன்னதமாக இல்லையா-? எத்தனை பேர், அந்த விதமாக, ஒரு இனிமையாக உணருகிறீர்கள்-? ஒருவருக்கும் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. எனக்கும் கூட ஒன்றும் சொல்ல முடியவில்லை. எனக்கு எனக்குச் சொல்வதற்கு வார்த்தைகள் போதவில்லை. எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவருடைய ஆவி அப்படியே உள்ளே அசைவாடுகிறது, பாருங்கள். 171. இது என்னவாயிருக்கிறது-? நீங்கள் செம்மறி ஆட்டுக்குட்டிகளாய் ஆகின்றீர்கள். செம்மறி ஆட்டின் ஆகாரத்துக்கு, செம்மறி ஆட்டுக்குட்டியின் ஆகாரத்துக்கு நேராய் உங்களை வழி நடத்த புறாவானது இங்கே இருக்கிறது. இதுவே செம்மறி ஆட்டின் ஆகாரம், "மனுஷன் அப்பத்தினாலே மாத்திரம் அல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்”. நம்முடைய ஆவி அதன் பேரில் ஜீவிக்கிறது. 172. நான் இப்பொழுது எனது நல்ல நண்பரான வழக்கறிஞர் ராபின்சனை சந்திக்க வேண்டும் என நினைக்கிறேன். எனக்கு நன்கு வியர்த்திருக்கிறபடியால், நான் ஆடைகளை மாற்றி, திரும்ப வரும் வரை காத்திருப்பீர்களா.. 173. சகோ.நெவில் இப்பொழுது கூட்டத்தைத் தொடர்ந்து நடத்துவார், பிள்ளைகளுக்கான வெகுமதிகள் உண்டு. கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக. 174. 'மகிமையிலிருந்து இறங்கின' என்ற பாடலை எப்பொழுதும் பாடுங்கள். அதை நீங்கள் செய்யும் போது, நீங்கள் என்ன விசுவாசிக்கிறீர்கள் என்பதை, "தேவனுடைய எல்லா பரிபூரணமும் அவருக்குள் வாசமாயிருக்கிறது," என்பதை நினைவில் கொள்ளுங்கள். சகோ. நெவில், கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக. 175. (சகோ.நெவில் சகோ.பிரன்ஹாமுடன் பேசுகிறார்- Ed]. நிச்சயமாக, நான் வரவேண்டும் என்று நீங்கள் விரும்பினால்... சகோ நெவில், "ஆம்" என்கிறார் -Ed). 176. சகோ.நெவில் என்னிடம் மீண்டுமாக இன்றிரவு பிரசங்கிக்க வரமுடியுமா என்று கேட்கிறார். அவருடைய ஆராதனையை எடுத்துக் கொள்ள விருப்பமில்லை. ஆனால், நான் இங்கே இருக்கிறேன், அதற்காகத்தான் நான் இங்கே இருக்கிறேன். சரி, கர்த்தருக்குச் சித்தமானால் இன்றிரவு பேசும்படியாய் நான் திரும்பவும் வருவேன்… *******